சண்டிகர் மாநிலத்தில் பிரதமர் நல நிதியின் கீழ், ஒன்றிய அரசு வழங்கிய வென்டிலேட்டர்கள் சரிவர இயங்கவில்லை என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த மூன்று மருத்துவமனைகள் ஒன்றிய அரசுக்கும் சுகாதாரத்துறைக்கும் கடிதம் எழுதியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையின்போது மே மாதத்தொடக்கத்தில் அம்மாநிலத்தில் உள்ள மூன்று மருத்துவமனைகளுக்கு 44 வென்டிலேட்டர்களை வழங்கியதாகவும், அதில் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 20 வென்டிலேட்டர்களும், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு 10 வென்டிலேட்டர்களும், அரசு உயர்தர சிறப்பு மருத்துவமனைக்கு 14 வென்டிலேட்டர்களும் வழங்கியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் குஜராத் மாநிலத்தைச் சார்ந்த ஜோதி சி.என்.சி ஆட்டோமேஷன் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது என்றும் தி வயர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் தாமன் -1 வென்டிலேட்டர்கள் சென்ற ஆண்டே சர்ச்சைக்கு உள்ளானதாகவும், அகமதாபாத் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் அம்மாநில சுகாதாரத்துறை அலுவலருக்கு, சரியாக இயங்கவில்லை என்று கூறி கடிதம் எழுதி இருந்ததகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.
இந்நிலையில், சி.என்.சி ஆட்டோமேஷன் நிறுவனத்துக்கும் பாஜகவினருக்கும் தொடர்பிருப்பதாக, இதுகுறித்து ஏற்கனவே தி வயர் நிறுவனம் சிறப்பு செய்தி வெளியிட்டுள்ளதையும் தி வயர் சுட்டிக்காட்டியுள்ளது.
இதே போன்று, பிரதமர் நல நிதியின் கீழ் பஞ்சாப் மாநில அரசுக்கு வழங்கிய 320 வென்டிலேட்டர்களில், 237 வென்டிலேட்டர்கள் பழுதுபட்டுள்ளதாக கடந்த மே மாதம் செய்தி வெளியாகியிருந்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.