Aran Sei

லட்சத்தீவு மக்களுக்கு எதிராக செயல்படும் நிர்வாகியை திரும்ப பெற வேண்டும் – ஒன்றிய அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்

ட்சத்தீவு மக்களுக்கு எதிராக ‘எதேச்சதிகாரமாக’ செயல்படும் நிர்வாகி பிரபுல் பட்டேலை திரும்ப பெற வேண்டும் என, ஒன்றிய அரசுக்கு லட்சத்தீவுகள் நாடாளுமன்ற உறுப்பினர் பிபி முகமது பைசல் கடிதம் எழுதியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், நிர்வாகி முன்மொழிந்த சட்டத்திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசங்களுக்கு நிர்வாகியாக இருந்த பிரபுல் கே பட்டேலுக்கு லட்சத்தீவுகள் நிர்வாகியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

சி.பி.ஐ புதிய இயக்குநரை  தேர்தெடுப்பதில் அரசின் செயல்பாடுகள் ஆட்சேபிக்கத்தக்கதாக உள்ளது- தேர்வுக்குழு உறுப்பினர் அதிர் சௌதிரி குற்றச்சாட்டு

அவர் பொறுப்பேற்ற பிறகு, லட்சத்தீவு விலங்குகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை, லட்சத்தீவுகள் சமூக விரோத நடவடிக்கைகளைத் தடுத்தல் ஒழுங்குமுறை, லட்சத்தீவுகள் மேம்பாட்டு ஆணைய ஒழுங்குமுறை மற்றும் லட்சத்தீவுகள் பஞ்சாயத்து பணியாளர் விதிகளில் திருத்தம் ஆகிய சட்ட வரைவுகளை வெளியிட்டுள்ளார்.

உத்தேச ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் வரைவுகளை வெளியிடுவதற்கு முன்னர், மக்கள் பிரதிநிதிகளிடம் விவாதிக்கப்படவில்லை என பைசல் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

அமைதியின்மைக்கு உடனடி தூண்டுதலாக, லட்சத்தீவு மேம்பாட்டு  ஆணையத்தின் வரைவு உள்ளது என தெரிவித்துள்ள பைசல், ”இது மக்களின் நிலத்தை அபகரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. நில உரிமையாளர்களின் நலன்களை பாதுகாக்காமல், நிலங்களை கையகப்படுத்த  ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை தரத்திற்கு இணையாக, சாலைகளின் தரத்தை உயர்த்தும் நடவடிக்கையாக உள்ளது. லட்சத்தீவிற்கு ஏன் பெரிய நெடுஞ்சாலைகள் தேவைப்படுகின்றன? பிரதான நிலப்பரப்பில் உள்ள மக்களின் வணிக நலன்களை நிர்வாகி முன்னெடுக்கிறார்” என அந்த கடிதத்தில் குற்றம் சாட்டியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை உடனே இறக்குமதி செய்ய வேண்டும்- சுகாதாரத்துறை அமைச்சருக்கு சு. வெங்கடேசன் வேண்டுகோள்

மக்கள் தொகையில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இருக்கும் நிலையில், லட்சத்தீவுகள் விலங்குகள் பாதுகாப்பு ஒழுங்குமுறை வரைவின் கீழ் முன்மொழியப்பட்டிருக்கும் மாட்டிறைச்சி தடை, யூனியன் பிரதேசத்தில் அமைதியின்மைக்கு வழிவகுத்துள்ளது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த வரைவின்படி லட்சத்தீவுகளில் எந்த ஒரு தனிநபரும் மாட்டிறைச்சியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, விற்கவோ, சேமிக்கவோ, எடுத்துச் செல்லவோ, விற்பனைக்கு வழங்கவோ, வாங்கவோ முடியாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாக 7 ஆண்டும் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை அபராதம் விதிக்க  சட்ட வரை அதிகாரமளிக்கிறது.

காசாவை சேர்ந்த பத்திரிகையாளர்களின் வாட்ஸ்ஆப் செயலி முடக்கம் – விதிகளின் அடிப்படையிலேயே நடவடிக்கையென வாட்ஸ்ஆப் கருத்து

பஞ்சாயத்து அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்காமல், ”இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கும் சட்ட திருத்ததை முன்மொழிந்ந்துள்ளார். உள்நோக்கதுடன் தற்போதை விதியை அவர் மாற்றியுள்ளார்” என பைசல் குற்றம் சாட்டியிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

பங்கராம் தீவில் உள்ள ஓய்வு விடுதிகளில் மட்டும் மதுபானத்திற்கு அனுமதியளித்திருந்த நிலையில், சுற்றுலா ஊக்குவிப்பு என்ற பெயரில், மக்கள் வசிக்கும் அனைத்து தீவுகளில் உள்ள ஓய்வு விடுதிகளுக்கும் மதுபான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுபான பரிமாற்றத்திற்கான விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்வது குறித்து மக்கள் கொந்தளிப்பில் உள்ளதாக பைசல் தனது கடித்தில்  கூறியிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா முதல் அலையில் ஒருவருக்கு கூட தொற்று பாதிக்கமல் இருந்த நிலையில், இரண்டாவது அலையில் தொற்று பரவுவதற்கு நிர்வாகி காரணமாகி இருப்பதாக தெரிவித்துள்ள பைசல், “லட்சதீவுகளுக்கு வருபவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் அவசியம் என்று இருந்த விதிமுறைகளில் தளர்வு அளிக்கப்பட்டது. இதனால் ஒராண்டாக தொற்று இல்லாமல் இருந்த தீவுகளில் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது” என, ஒன்றிய அரசுக்கு லட்சத்தீவுகள் நாடாளுமன்ற உறுப்பினர் பிபி முகமது பைசல் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்