திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா அய்யம்பாளையம் ஊராட்சி கானாக்குளம் பகுதியில் மாட்டிறைச்சிக் கடை நடத்தி வந்த வேலுச்சாமி என்பவரைக் கடை நடத்தக் கூடாது என்று கூறிய தாசில்தாரைக் கண்டித்து பெரியார் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கானாக்குளம் பகுதியில் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக வேலுச்சாமி என்பவர், ஊராட்சி நிர்வாகத்தின் முறையான அனுமதி பெற்று முறையாக வரி செலுத்தி மாட்டிறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளார்.
மாட்டிறைச்சியே சிந்து சமவெளி மக்களின் விருப்ப உணவு – கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வில் தகவல்
இந்நிலையில், கடந்த ஜூன் 26 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் அந்தக் கடைக்கு வந்த அவினாசி தாசில்தார் தமிழ்செல்வன் “மாட்டுக்கறி விற்பனை செய்யக்கூடாது” என்று வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்த காணொளியும் இணையத்தில் பரவியது.
இந்தக் காணொளியில், தாசில்தார் தமிழ்செல்வன், கடையின் மீது புகார் எழுந்துள்ளதால் மாட்டிறைச்சி விற்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள காட்டாறு இணையதளம், “மாட்டுக் கறிக்கடை இருப்பதால் அப்பகுதியின் சுகாதாரம் சீர்கேடாகிறது என்று ஒரு பொய்யான புகாரைக் குப்பட்டம்பாளையம் பகுதி ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்கள் கடந்தஜூன் 25 ஆம் தேதி அன்று அளித்திருக்கிறார்கள்” என்றும் கூறியுள்ளது.
பால் பண்ணைகளை மூடும் லட்சத்தீவுகள் நிர்வாகியின் உத்தரவு – நடைமுறைப்படுத்த கேரள உயர்நீதிமன்றம் தடை
இந்நிலயில், வட்டாட்சியரின் இந்த வாய்மொழி உத்தரவுக்கு எதிராக, நேற்று ஜூன் 27, காலை 10.30 மணிக்கு அவினாசி தாசில்தார் அலுவலகத்தில் மாட்டுக்கறி உணவு பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் சார்பாக, ஆதித்தமிழர் பேரவை, காட்டாறு குழு, தலித் விடுதலைக் கட்சி, தேசிய சிறுத்தைகள் கட்சி, எஸ்.டி.பி.ஐ ஆகிய அமைப்பினர் தாசில்தாரைச் சந்திக்க அவரது அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர் ஆனால் அவர் அவர்களைச் சந்திக்க மறுத்துதுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு அன்னூர் பயணியர் மாளிகை முன்பு
பெரியார் கூட்டமைப்பு சார்பாக, வட்டாச்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அவினாசி வட்டாச்சியரை அரண்செய் தரப்பில் அழைத்த போது அவர் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.