Aran Sei

‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ என்ற குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படம்: ஒன்றிய அரசின் கடும் எதிர்ப்பால் அந்த ஆவணப்படத்தை நீக்கிய யூடியூப்

குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் யூடியூப் நிறுவனம் அந்த ஆவணப்படத்தை தனது தளத்திலிருந்து நீக்கியது.

கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தோடு, அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி பிபிசி ஆவணப்படம் தயாரித்துள்ளது. பிரதமர் மோடிக்கும் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கும் இடையிலான பதற்றத்தை பாருங்கள் எனவும் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காணொளி பலரால் பகிரப்பட்டு, விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

2002 குஜராத் கலவரம், மொகலாய நீதிமன்றங்கள் பற்றிய பகுதிகள் 12-ம் வகுப்பு பாடப்புத்தகங்களிலிருந்து நீக்கம்: என்சிஇஆர்டி தகவல்

இது குறித்து பேசிய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி, “இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். ஒரு சார்பான ஆவணப்படம், காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதை காட்டுகிறது. இந்த ஆவணப்படம் கண்ணியமானது அல்ல எனவும் கடுமையாக சாடினார். இந்த ஆவணப்படங்களை இந்தியாவில் ஒளிபரப்ப முடியாது என அவர் கூறிய நிலையில், யூடியூப் நிறுவனம் ஆவணப்படத்தை தனது தளத்திலிருந்து நீக்கியுள்ளது.

கட் பண்ணாம இன்டெர்வியூ போடணும் | மிரட்டி அசிங்கப்பட்ட ஆட்டுக்குட்டி | Aransei Roast | AnnamalaiBJP

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்