உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியில் உள்ள பழமைவாய்ந்த கரீப் நவாஸ் மசூதி இடிக்கப்பட்டது குறித்து செய்தி வெளியிட்ட தி வயர் பத்திரிக்கை மற்றும் அதன் 2 பத்திரிக்கையாளர்கள்மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளதாக அந்தப் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த மார்ச் 17 அன்று, அப்பகுதி நிர்வாகத்தில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த மசூதி இடிக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாகக் காவல்துறை பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையில், மசூதி இடிக்கப்பட்டது என்று குறிப்பிடாமல், சட்டவிரோத கட்டுமானம் என்று குறிப்பிட்டுள்ளதாகவும், இந்தக் காணொளியை ட்விட்டரில் பகிர்ந்த 2 இரு பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை நிறுவனம்மீது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்தார்கள் என்று கூறி அந்த முதல் தகவல் அறிக்கைப் பதியப்பட்டுள்ளதாகவும் தி வயர் செய்தி கூறுகிறது.
கடந்த 14 மாதங்களில் தி வயர் பத்திரிக்கையாளர்கள்மீது பதியப்படும் நான்காவது முதல் தகவல் அறிக்கை இதுவாகும் என்றும் அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.