Aran Sei

நாடு தழுவிய அளவில் அரசு ஊழியர்களின் பொது வேலைநிறுத்தம் – வங்கி சேவைகள் முடங்கியது

த்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள இரண்டு நாள் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வங்கி ஊழியர்களில் ஒரு பகுதியினர் பணிக்கு வராததால் வங்கி சேவைகள் இன்று (மார்ச் 28) பாதிப்புக்கு உள்ளாகின.

மறுபுறம், புதிய தலைமுறை தனியார் துறை வங்கிகளின் செயல்பாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

அதேநேரம், பல பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்கள் பணிக்கு வராததால் நிதி பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், காசோலைகளுக்கு வழங்கப்படும் அனுமதிக்கு கால தாமதம் ஏற்படலாம் என்றும் வேலைநிறுத்தத்தால் அரசாங்க கருவூல செயல்பாடுகளும் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தொடங்கியது பொது வேலை நிறுத்தம் – ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட தொழிற்சங்கங்கள் முடிவு

இந்த வேலைநிறுத்தத்தின் தாக்கமானது கிழக்கில் உள்ள மாநிலங்கள் அதிகம் தென்பட்டது என்றும் அங்குள்ள பொதுத்துறை வங்கிகளின் பல கிளைகள் மூடப்பட்டுள்ளன என்றும் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

“மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை, உயர் அதிகாரிகள் மட்டும் பணிக்கு வந்ததால் வங்கி கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், ஊழியர்கள் பலர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள்: சீர்த்திருத்தமா? சீர்கேடா? – விரிவான அலசல்

2021-22ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, ‘இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் அரசின் நடவடிக்கைக்கு’ வங்கி ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலும், டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தவும், சேவை கட்டணத்தை குறைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளன.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தை தவிர, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் ஆகியவையும் இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.

உரிமைகளைப் பறிக்கும் தொழிலாளர் சட்ட திருத்தங்கள் : ஷியாம் சுந்தர்

அனைத்து இந்திய காங்கிரஸ் தொழிற்சங்கம், இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சிஐடியு) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற்சங்கம் போன்றவை தொழிலாளர் சட்டங்களில் முன்மொழியப்பட்ட மாற்றங்களையும் தனியார்மயமாக்கலையும் முழுவதுமாக ரத்து செய்யக் கோரி வருகின்றன.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்