Aran Sei

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அதானி நிலக்கரி நிறுவனத்துடன் உறவு முறிவு – பேங்க் ஆஃப் நியூயார்க் நிதி நிறுவனம் அறிவிப்பு

ஸ்திரேலியாவில் தொடங்கப்படவுள்ள அதானி நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு (Carmichael Coal Mine) நிதி தொடர்பான சேவை வழங்கும் பொறுப்பிலிருந்து பேங்க ஆஃப் நியூயார் மெலோன் கார்ப் (Bank of New York Mellon Corp) நிறுவனம் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது.

பேங்க் ஆஃப் நியூயார் மெலோன் கார்ப் நிறுவனத்தின் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக விதிகளில் இயற்கை வளங்களை பொறுப்புடன் பயன்படுத்துதல், காலநிலையை பாதிக்கும் செயல்களை குறைத்தல், ஆற்றல் துறையில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல், பொறுப்புடன் நிர்வகித்தல், நிறுவனம் செயல்படும் பகுதியில் வசிக்கும் மக்களுடன் நல்உறவை பேணுதல், வணிக நெறிமுறைகளை வலுவாக கடைபிடித்தல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், அந்த நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதானி நிறுவனத்துடனான உறவு குறித்து மேற்கொள்ளப்பட்ட மீளாய்வில், அந்த நிறுவனம் பேங்க் ஆஃப் நியூயார்க் நிறுவனத்தின் சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாக விதிகளுடன் ஒத்துப்போகவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, அதானி நிறுவனத்துடனான உறவை முறித்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி நிறுவனத்தின் ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்க நிறுவனத்திற்கு 5,000 கோடி கடன் வழங்கவுள்ளதாக, 2015 ஆம் ஆண்டு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) அறிவித்தது. ஆனால், சூழலியல் செயல்பாட்டாளர்களின் அழுத்தம் காரணமாக எஸ்பிஐ வங்கி அதானிக்கு கடன் கொடுப்பதிலிருந்து பின்வாங்கியிருப்பதாக வணிக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருந்தபோதும் எஸ்பிஐ வங்கி இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லேண்ட் மாகாணத்தில், பிரேவஸ் மைனிங் அண்ட் ரிசோர்சஸ் (Bravus Mining & Resources) என்ற பெயரில் அதானி தொடங்கியுள்ள நிலக்கரிச் சுரங்கம், இந்த ஆண்டின் இறுதியில் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதானியின் சுரங்கம், சுற்றுச் சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவத்துவதாகவும், மக்களின் வரிப் பணத்தில் ஆஸ்திரேலிய அரசு அதானிக்கு வரிச் சலுகைகள் வழங்குவதாகவும் குற்றம்சாட்டி, அதானி நிறுவனத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் சிட்னியில், ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற மைதானத்தை முற்றுகையிட்டு காலநிலை செயல்பாட்டாளர்கள் போராட்டம் நடத்தினர். எஸ்பிஐ வங்கி அதானி நிறுவனத்திற்கு கடன் வழங்கக் கூடாது என்று எழுதிய பதாகையை ஏற்தியபடி ஒரு போராட்டக்காரர் திடீரென மைதனாத்திற்கு நுழைந்ததால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்