Aran Sei

அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்ட எழுத்தாளர் – வங்கதேச சிறையில் மரணம்

மூக ஊடகத்தில் கருத்து தெரிவித்தற்காக, கைது செய்யப்பட்டு கடந்த ஒராண்டாக சிறையில் இருந்த வங்கதேச எழுத்தாளர் முஸ்டாக் அகமது சிறையில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்றின்போது, தவறான நிர்வாகம் மற்றும் ஊழலில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான ஆட்சி ஈடுபட்டதாக,  கார்ட்டூன் மற்றும் கருத்து பகிர்ந்த குற்றச்சாட்டில் ஒரு ஆண்டிற்கு முன்பாக முஸ்டாக் அகமது உள்ளிட்ட 11 பேர் கைது செய்யபட்டனர்.

“ஒற்றுமை, நிதி நடவடிக்கைகள், பாதுகாப்பு, மத விழுமியங்கள் அல்லது நாட்டின் பொது ஒழுக்கம்” ஆகியவற்றை மீறியதற்காக, 2018 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட, டிஜிட்டல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முஸ்டாக் கைது செய்யப்பட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

நடுக்கடலில் சிக்கி தவிக்கும் 81 ரோஹிங்கியா அகதிகள் – ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்தியா

எதிர் கருத்துகளை ஒடுக்கும் வகையில், அரசாங்கம் முஸ்டாக் அகமதை கைது செய்ததாகவும், கடந்த ஓராண்டில் மட்டும் ஹசீனாவின் அரசாங்கத்தை விமர்சித்ததற்காக, பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட 138 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஆசிய மனித உரிமை ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

காஷிம்பூர் உயர்பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டிந்த அகமதுவிற்கு, ஆறு முறை ஜாமீன் மறுக்கப்பட்டிருப்பதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

அகமது மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் மற்றும் டிஜிட்டல் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை வைத்திருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தலைமை நீதிபதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – ஒப்புதல் அளிக்க அரசு வழக்கறிஞர் மறுப்பு

முஸ்டாக் அகமது மரணம் தொடர்பாக பேசிய காஷிம்பூர் சிறையின் மூத்த கண்காணிப்பாளர் முகமது கியாஸ் உத்தின், ”வியாழக்கிழமை மாலை அகமது சுயநினைவு இழந்ததை அடுத்து, சிறைச்சாலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சைக்காக காசிப்பூர் மருத்துமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்” எனத் தெரிவித்தாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

54 வயதான முஸ்டாக் அகமது, ”தனது உடல்நிலை குறித்து இதுவரை புகார் தெரிவித்ததில்லை. அவர் இரைப்பை மற்றும் தலைவலிக்கு மருந்துகளை எடுத்து வந்தார்” எனச் சிறை மருத்துவர் தெரிவித்தாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனையின்போது உடன் இருந்ததாக, அகமதுவின் உறவினரும், மருத்துவருமான நஃபீசூர் ரஹ்மான் கூறியதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கோயில்களை மீட்க வேண்டும் – ஜக்கிக்கு ஆதரவாக களமிறங்கிய நகைச்சுவை நடிகர் சந்தானம்

அவரது உடலில் காயங்கள் இருந்ததற்காக அடையாளம் இல்லை என்றும் அவரது இதயம் பெரிதாக இருந்தது கண்டறியப்பட்டது என்றும், அவர் சுயநினைவை இழந்தபோது இரத்த அழுத்தம் குறைவாக இருந்தது என்றும் ரஹ்மான் கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் ஆசியாவின் மூத்த ஆராய்ச்சியாளரான அலியா இப்திகர், முகமதுவின் மரணம் “ஒரு பேரழிவு தரக்கூடிய மற்றும் மனக்கவலைக்குரிய இழப்பு” என்று குறிப்பிட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் கவலையளிக்கிறது – ஐ.நா மனித உரிமை ஆணையர்

டாக்கா பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரும் வங்கதேசத்தின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான மிசானூர் ரஹ்மான், “அரசாங்கத்தை விமர்சிப்பது ஒரு தேசத்துரோக குற்றம் அல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்டாக் அகமது குற்றவாளி அல்ல – அவர் அரசாங்கத்தை விமர்சித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மட்டுமே ஒன்பது மாதங்கள் சிறையில் இருந்தார். சிறையில் அவர் இறந்தது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.” எனத் தெரிவித்திருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்