Aran Sei

இந்தியாவில் வாழச் சிறந்த நகரங்களில் பெங்களுரு முதல் இடம் – சென்னைக்கு 4வது இடம்

ந்தியாவில் வாழ்வதற்கு சிறந்த நகரங்களில், பெங்களுரு முதல் இடத்தையும் சென்னை நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள, வாழ்வதற்கு சிறந்த நகரங்களின் பட்டியலில், கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களுரு முதலிடத்தையும், அதைத்தொடர்ந்து மஹாராஷ்ட்ராவின் புனே நகரம் இரண்டாவது இடத்தையும், குஜராத்தின் அகமதாபாத் மூன்றாவது இடத்தையும், சென்னை நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.

111 நகரங்களை கொண்ட இந்தப் பட்டியலில் தமிழத்தின் கோயம்புத்தூர் நகரமும் இடம் பெற்றுள்ளது.

இந்தியாவை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்துகிறார் மோடி – அமெரிக்க மனித உரிமை அமைப்பு அறிக்கை

10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், சிம்லா முதலிடத்தை பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து சேலம் 5வது இடத்தையும், வேலூர் 6வது இடத்தையும், திருச்சி 10வது இடத்தையும் பிடித்துள்ளது.

62 நகரங்களை கொண்ட இந்த பட்டியலில், பீகார் மாநிலத்தின் முசாஃபர்பூர் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

‘லவ் ஜிகாத்’ என்ற சொல்லில் எனக்கு உடன்பாடில்லை – பாஜக கூட்டணி கட்சித் தலைவர் சவ்தாலா கருத்து

10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட, மாநகராட்சிகளின் செயல்பாடு அடிப்படையிலான தர வரிசையில், டெல்லி மாநகராட்சி முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் சேலம் மாநகராட்சி 5வது இடத்திலும், திருப்ழுர் 6வது இடத்தையும், திருநெல்வேலி மாநகராட்சி 10வது இடத்தையும் பிடித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்