Aran Sei

‘மாணவிகளின் கல்விதான் முக்கியம்’ – ஹிஜாப் அணிந்த மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்கும் பெங்களூரு பள்ளிகள்

Credit : NDTV

ஹிஜாப் விவகாரத்தில் மாணவிகளின் கல்வி தான் முக்கியம் என்று பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.

கர்நாடகாவில் பள்ளி ஆண்டு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், ஹிஜாப் அணிவதற்கு அணிவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதனால், பல்வேறு மாணவிகள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளிகளில், மாணவிகள் ஹிஜாப் அணிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும் தேர்வு எழுத அனுமதிக்கபடுகின்றனர்.

சில கல்வி நிறுவனங்கள் ஹிஜாப் தடை தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றுகின்றன. மற்ற பள்ளிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்கப்படுகின்றனர் என ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மேலாண்மை கூட்டமைப்பின் பொது செயலாளர் டி. சஷிகுமார் தெரிவித்துள்ளார்.

பீகாரில் ஹிஜாப் அணிந்த பெண்ணுக்குப் பணம் தர மறுத்த வங்கி ஊழியர் – காணொளி வெளியானதால் மன்னிப்பு கோரினார்

”பெங்களூருவில் பெரிய அளவில் சர்ச்சை இல்லை. பல பள்ளிகள், ஹிஜாப் விவகாரத்தில் கவனம் செலுத்தவில்லை. அதை மாணவிகளின் கவனத்திற்கே விட்டுவிட்டனர். அரசியல் காரணங்களுக்காக உருவாக்கபட்ட இந்த சர்ச்சையை விட மாணவிகளின் கல்வியில் தான் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். இந்த விவகாரத்தில், பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்களிடையே ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியான குட்வில் கிறுஸ்டியன் பள்ளியில் 90 விழுக்காட்டிற்கு அதிகமான மாணவர்கள் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆகையால், அவர்கள் நீதிமன்ற உத்தரவு மீறி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அனுமதிக்கிறார்கள்.

அந்த பள்ளியில் பயிலும் மாணவியான சமியா பாத்தீமா பேசுகையில், “ஆம், நான் என் வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிந்து வருகிறேன். ஹிஜாப் அணிவதில் இருந்து என்னை யாரும் தடுக்கவில்லை. ஹிஜாப் அணிவது எனது உரிமை. பள்ளியில் சேர்க்கும்போது, ஹிஜாப் அணிந்து வரை அனுமதியில்லை என்ற எழுத்துப்பூர்வ உத்தரவும் இல்லை” என கூறியுள்ளார்.

கர்நாடகாவில் தாக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞர் – ஹிஜாப் வழக்கு காரணம் என சகோதரி புகார்

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குட்வில் பள்ளியின் முதல்வர் சுஜாதா கிறுஸ்டோபர், “கல்வி வழங்குவதே எங்கள் முதன்மையான நோக்கம். எனவே நாங்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

”இங்கு ஒரு அமைதியான சூழல் நிலவி வருகிறது. மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து வகுப்பறைகளில் அமர்ந்து பாடங்களை படித்து வருகின்றனர்” என அவர் கூறியுள்ளார்.

”ஹிஜாப் அணிந்து மாணவிகள் வகுப்பறையில் பங்கேற்பதை போன்று, ஒரு சில மாணவிகள் ஹிஜாப்பை அகற்றிவிட்டு வகுப்பறைக்குள் செல்கின்றனர்” என சுஜாதா தெரிவித்துள்ளார்.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்