Aran Sei

ஆக்ஸிஜன் உற்பத்தியின் பெயரால் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட நீட்டிப்பு வழங்கக்கூடாது-  தமிழ்நாடு அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

க்ஸிஜன் உற்பத்தி பெயரால்  ஆலையை கூடுதலாக 6 மாதம் திறக்க உச்சநீதிமன்றத்தில்  ஸ்டெர்லைட் அனுமதி கோருவதை உடனடியாக  தடுத்து நிறுத்த வேண்டுமென   தமிழ்நாடு அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

பஸ்டாரில் மீண்டும் ஒரு “ஷாகீன்பாக்”: இளைஞர்களின் தலைமையில் விடாமுயற்சியுடன் போராடும் அமைதி இயக்கத்தின் வரலாறு

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா 2வது அலை பரவலால் நிலவிய ஆக்ஸிஜன் பற்றாக்குறையை சமாளிக்க,  ஸ்டெர்லைட் காப்பர் ஆலை நிறுவனத்தின் மூலம், 4 மாதங்களுக்கு ஆக்ஸிஜனை தயாரித்துக்கொள்ள, தமிழக அரசிடம் அனுமதி பெற்று உச்ச நீதிமன்ற உத்தரவு மூலம் ஆலையை திறந்த ஸ்டெர்லைட் நிறுவனம், தற்போது  தங்களுக்கு மேலும் 6 மாத கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது” என்று  கூறியுள்ளார்.

ஹரியானாவில் தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்: அமைச்சர்கள், பாஜக தலைவர்களை முற்றுகையிடும் விவசாயிகள்

மேலும், கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக இருந்தபோது  தமது ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என்ற வாதத்தை முன் வைத்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது  ஸ்டெர்லைட் நிர்வாகம், ஆனால்,  ஆலை திறக்கப்பட்ட பின்னர் அந்த ஆலையில் அது குறிப்பிட்ட  அளவிற்கு மருத்துவ ஆக்சிஜனை தயாரிக்க முடியாது என்பது தெரியவந்தது என்றும்  அந்த அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது,”சட்டத்திற்குப் புறம்பாக நச்சு வாயுக்களை வெளியிட்டு சுற்றுச்சூழல் அனைத்தையும் விஷமாக்கி, அதற்கெதிராக போராடிய 16 உயிர்களை காவு வாங்கி கிரிமினல் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டிய கருப்பு நிறுவனமான ஸ்டெர்லைட், ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாக சுத்தமான காற்றை உற்பத்தி செய்து தருவதாக நீலிக்கண்ணீர் வடித்தது” என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி  தன் அறிக்கையில்  கூறியுள்ளது.

அதுபோலவே, ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து திறந்துவைப்பதற்கான பல்வேறு வேலைகளில் ஆலை நிர்வாகம் ஈடுபட்டது. ஆலையை சுற்றியுள்ள கிராம மக்கள் மத்தியில் சாதி ரீதியாக பிளவை ஏற்படுத்த முயற்சித்தது என்று அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று,  “பொதுமக்கள் மத்தியில் நற்பெயரை உருவாக்கும் வகையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு படுக்கைகள் தருவது, அதை ஊடகங்களில் விளம்பரம் செய்து தன்னை நல்லவன் போல் காட்டிக் கொள்வது உள்ளிட்ட தந்திரங்களை செய்யத் துவங்கிய ஸ்டெர்லைட் நிர்வாகம், தற்போது தமிழக அரசு மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், கூடுதலாக 6 மாத கால நீட்டிப்பு செய்ய உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது” என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி  தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கூடங்குளம் அணு உலை விரிவாக்க அனுமதியை உடனே ரத்து செய்யவேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்

எனவே, ஆக்ஸிஜன் உற்பத்தி பெயரால் ஆலையை கூடுதலாக 6 மாதம் திறக்க உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கோரும் ஸ்டெர்லைட் ஆலையின் முயற்சியை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்; சட்டப்படி தடுத்து நிறுத்த வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் முபாரக்  வலியுறுத்தி உள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்