இந்தியா பால்வளத்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதன் மூலம், 10 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் விலங்குகள் நெறிமுறை சிகிச்சைக்கான மக்கள் (பீட்டா) அமைப்பு தடை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு அமுல் பால் உற்பத்தி நிறுவனத்தின் துணைத் தலைவர் வலம்ஹி ஹம்பல் கடிதம்.
”பால் பண்ணைத்துறை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், பால் பண்ணைத்துறைக்கு எதிராக பீட்டா போன்ற சந்தர்ப்பவாத சக்திகளால் பரப்பபடும் தவறான தகவலால் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்கப்படலாம். இது போன்ற அமைப்புகள் இந்திய பால் உற்பத்தியாளர்களை வேலையற்றவர்களாக மாற்றும் சதியின் ஒரு பகுதியாகும்” என அவர் குறிப்பிட்டார்.
“இது போன்ற அமைப்புகள் இந்தியாவில் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்துவதை உறுதி செய்வதோடு, தவறான தகவல் பிரச்சாரத்தின் மூலம் பால் தொழிலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் கண்டனத்திற்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க தேவையான நடவடிக்கையைத் தொடங்குமாறு குஜராத் பால் உற்பத்தியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்துகின்றனர். மேலும், செயற்கை பால் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் ஆலைகளை ஊக்குவிப்பதன் மூலம் இந்திய பால் உற்பத்தியாளர்களுக்குப் பீட்டா தீங்கு விளைவிக்கிறது” என அவர் குற்றம்சாட்டினார்.
இந்தியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமான அமுல், தங்கள் நிலையைப் பயன்படுத்தி தாவர பால் மற்றும் உணவுக்கான சந்தையைச் சுரண்டு வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பீட்டா அறிவுறுத்தி இருந்த நிலையில், அமுல் நிறுவனம் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளது.
நெடுங்காலமாக சிறையிலுள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் – திருமாவளவன் வேண்டுகோள்
”இந்திய கலாச்சாரம் கால்நடைகளைத் தங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாக நிலைநிறுத்துகிறது. இந்திய மக்கள் கால்நடைகளைக் குடும்ப உறுப்பினர்போல வளர்க்கின்றனர். எனவே கொடுமை என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியா பால் துறை, வெளிநாடுகளில் இருந்து பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி செய்வதை பாதுகாப்போடு, 10 கோடி இந்திய மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. தன்னிறவு பெற்ற பால் பண்ணைத்துறையை உடைக்கும் முயற்சியாக தவறான தகவல் பிரச்சாரத்தில் இது போன்ற அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றனர்”என அவர் குற்றம்சாட்டினார்.
‘இலங்கையிலிருந்து இந்தியாவை வளைக்கும் சீனா’ : என்ன செய்யப் போகிறது ஒன்றிய அரசு என ராமதாஸ் கேள்வி
”அமுல் என்ற பெயரில் பால் பொருட்கள் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை சம்மேளனத்துடன் (ஜி.சி.எம்.எம்.எஃப்) தொடர்புடைய 40 லட்சம் பால் உற்பத்தியாளர் மற்றும் 15 பால் பண்ணையாளர்களும், பீட்டாவை தடை செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுங்கள். எங்கள் மட்டங்களில் நாங்கள் இதையே செய்வோம்” என கூறினார்.
Source : The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.