குஜராத் மாநில அகமதாபாத் சாலைகளில் அசைவ உணவுக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டது, தெருவோர வியாபாரிகளை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களின் அருகாமையில் இருந்து அகற்றப்பட்ட தெருவோர உணவுக் கடைகளின் உரிமையாளர்கள் தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அச்சத்தில் உள்ளனர்.
நகரத்தில் உள்ள உணவகங்களில் அசைவ உணவை அனுமதிக்கும் போது, தள்ளுவண்டி கடைகளுக்கு மட்டும் ஏன் இந்த தடை என்று அதன் உரிமையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மக்களிடம் உள்ள வெவ்வேறு உணவுப் பழக்கங்கள் குறித்து மாநில அரசுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், சுகாதாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகளை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் பாஜகவைச் சேர்ந்த குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் தெவித்துள்ளார்.
“சிலர் சைவ உணவை உண்கிறார்கள். சிலர் அசைவ உணவை உண்கிறார்கள். பாஜக அரசுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. குறிப்பிட்ட வண்டிகளை சாலையில் இருந்து அகற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. எங்கள் ஒரே கவலையானது, உணவு வண்டிகளில் விற்கப்படும் உணவு சுகாதாரமற்றதாக இருக்கக்கூடாது என்பதுதான்” என்று பூபேந்திர படேல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு அதிகரிப்பு: பிரதமரை சந்திக்கும் மம்தா பானர்ஜி
உணவு வண்டிகளை அகற்றுவதற்கான முடிவுகளை மாநகராட்சிகள் அல்லது நகராட்சிகள் நிர்வாகங்கள் எடுக்கின்றன என்றும் அவ்வண்டிகள் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தால் அவர்கள் அவ்வாறு செய்யலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாலைகளில் இருந்தும், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலிருந்தும் 100 மீட்டர் தொலைவில் செயல்படும் அசைவ உணவுக் கடைகளை அகற்ற அகமதாபாத் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. பாஜக தலைவர்கள் கோரியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Source: PTI, India Today
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.