Aran Sei

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா – தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

னிரெண்டாம் வகுப்பு  மதிப்பெண் அடிப்படையில்  மருத்துவ படிப்பில் சேரும் வகையில்  நீட் தேர்விலிருந்து  விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் , திமுக வலியுறுத்தி வந்த நிலையில், திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும் , ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது.  அந்தக் குழு  பொது மக்களிடம் கருத்துப் பெற்று ஆய்வு மேற்கொண்டு  அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

இந்நிலையில்,  சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று (செப். 13) நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்து தாக்கல் செய்தார்.

அப்போது, “நீட் தேர்வை ஆரம்பம் முதலே திமுக அரசு எதிர்த்து வருகிறது. இந்தச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே அதற்கு விலக்கு பெறும் வகையில் புதிய மசோதா நிறைவேற்றப்படும் என உறுதியளித்தோம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சிறந்த மருத்துவர்களை தமிழகம் உருவாக்கியுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதுதான் நியாயமான சேர்க்கையாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும்,  “ஜெயலலிதா இருக்கும்போதுகூட நீட் தேர்வு வரவில்லை. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்ய உள்ளேன். வாணியம்பாடி கொலை போன்ற சம்பவங்கள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும்” என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இந்நிலையில்,  நீட் தேர்வு தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் – எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே விவாதம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து,  அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்