Aran Sei

‘விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் அனைத்து தரப்புகளுக்கும் தடை’ – அதிகாரபூர்வமாக அறிவித்தது இலங்கை அரசு

விடுதலைப் புலிகள் அமைப்பைப் போற்றும் அல்லது ஊக்குவிக்கும் வகையில் செயற்படும் அனைத்து தரப்புகளுக்கும் தடை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று (மார்ச் 30), இலங்கை தலைநகர் கொழும்பில், அந்நாட்டு அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில செய்தியாளர்களைச் சந்தித்து பேசுயுள்ளார்.

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் – ஐ.நா மனித உரிமை ஆணையம் அதிரடி

அப்போது, “தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்படும் அனைத்து தரப்புகளையும் தடை செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறான நபர்கள் மற்றும் குழுக்களுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாரில்லை. புலம்பெயர் சமூகத்துடன் அரசாங்கம் நெருக்கமாக செயற்படும்.” என்று தெரிவித்துள்ளதாக தமிழ்வின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அச்செய்தியில், “தமிழீழ விடுதலைப் புலிக் கொள்கைகள், கோட்பாடுகளை ஊக்குவிக்கும் எந்தவொரு தரப்புடனும் தொடர்பு பேணத் தயாரில்லை. தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் தடை செய்யப்பட்ட இயக்கம். பிரிவினைவாதம் இலங்கையின் அரசியல் அமைப்பில் தடை செய்யப்பட்ட விடயம்.” என்று அவர் கூறியுள்ளார்.

உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தமிழீழ விடுதலைப் புலிகளை அல்லது பிரிவினைவாதத்தை போற்றும், ஊக்குவிக்கும் தரப்புகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளதாக தமிழ்வின் தெரிவித்துள்ளது.

‘விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கமல்ல’ – பிரிட்டன் மேல்முறையீட்டுக் கழகம் தீர்ப்பு

அண்மையில், பிரிட்டனில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டுக் கழகம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் வைத்திருப்பது தவறு என்றும் சட்டவிரோதம் என்றும் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, விடுதலைப்புலிகள் அமைப்பு பிரிட்டனில் வெளிப்படையாகச் செயல்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்