Aran Sei

`கோமாதா நம்முடைய மாதா’ – கர்நாடகாவில் அமலாகப்போகும் பசுவதை தடுப்புச் சட்டம்

கர்நாடகாவில் அமல்படுத்தப்படவுள்ள பசுவதை தடுப்புச் சட்டத்திற்குக் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 27 ஆம் தேதி, செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக கால்நடை வளர்ப்புத்துறை அமைச்சர் பிரபு சவான், “நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, ’கோமாதா நம் தாய். அதனால் கோமாதாவை கொல்லக் கூடாது’ என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இந்த அமர்வில் மசோதா 100% நிறைவேற்றப்படும்” என்று கூறியிருந்தார்.

“பசுவதை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது” – அலகாபாத் உயர்நீதிமன்றம்

இந்த மசோதா அமல்படுத்தப்பட்டால், பசுவதை, மாட்டிறைச்சி விற்பனை மற்றும் நுகர்வுக என்று எல்லாவற்றுக்கும் தடை ஏற்படும். பசுவதை தடை செய்யப்படுவதோடு, எருமை மற்றும் எருமைக் கன்றுகளுக்கான வதையும் தடை செய்யப்படும்.

இந்தச் சட்டம், 2010 ஆம் ஆண்டில், பாஜக கொண்டு வர முயன்ற சட்டத்தைப் புதுப்பிக்கும் விதமாக இருப்பதாக தி வயர் மேற்கோள்காட்டியுள்ளது.

2010 ஆம் ஆண்டு, எடியூரப்பா அரசு, கர்நாடக வதை தடுப்பு மற்றும் கால்நடைப் பாதுகாப்பு மசோதாவை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், கடுமையான எதிர்ப்பின் காரணமாக அந்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. அதைத் தொடர்ந்து, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு 2013 ஆம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தபோது, ​​இந்த மசோதா கைவிடப்பட்டது.

`பசுக்களைப் பாதுகாக்க கோமாதா வரி’ – மத்திய பிரதேச பாஜக அரசின் அடுத்த திட்டம்

பத்தாண்டுகளுக்குப் பிறகு, எடியூரப்பா அரசு மீண்டும் இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சிக்கிறது. பாஜக 2018 ஆம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையில் இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.

இதுபோல கடுமையான பசுவதை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவதில், கர்நாடகா முதல் மாநிலம் அல்ல. ஏற்கனவே ஆந்திரா, அசாம், பீகார், சண்டிகர், சத்தீஸ்கர், டெல்லி, ஹரியானா, இமாசலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களில் இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

இந்தச் சட்டம் குறித்து, கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கோவாவில் பாஜக ஆட்சியில் இருந்தாலும், அங்கு பசுவதை தடை செய்யப்படவில்லை. கர்நாடகாவில் மட்டும் ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

`பசுக்களைப் பாதுகாக்க கோமாதா வரி’ – மத்திய பிரதேச பாஜக அரசின் அடுத்த திட்டம்

”இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள், இந்தப் பசு வதைச் சட்டம் அமல்படுத்தப்பட்டால், தங்கள் நடைமுறை வாழ்வை அது எவ்வளவு பாதிக்கும் என்று தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பசு வதை தடைசெய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில், பசு வதை எதிர்ப்பு சட்டமான கர்நாடக பசுவதை மற்றும் கால்நடைப் பாதுகாப்புச் சட்டம், 1964 இல் இருந்து நடைமுறையில் உள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்