Aran Sei

கட்டாயமதமாற்றம் எனக்கூறி பஜ்ரங்தளம் போராட்டம் – ரயில்பயணத்தில் பாதிவழியில் இறக்கிவிடப்பட்ட கன்னியாஸ்திரிகள்

டெல்லியிலிருந்து ரயில் பயணம் மேற்கொண்டிருந்த இரண்டு கன்னியாஸ்திரிகளை கட்டாய மதமாற்றத்துக்குப் பெண்களை கூட்டி செல்கிறார்கள் எனக் கூறி பஜ்ரங் தள் உறுப்பினர்கள் மிரட்டியுள்ளதாக தி நேஷன்ஓய்டு செய்தி வெளியிட்டுள்ளது.

ஈஸ்டர் விடுமுறையின் காரணமாக டெல்லியிலிருந்து ரூர்கேலாவுக்கு மதஉடையிலிருந்த இரண்டு கன்னியாஸ்திரிகளும் அவர்களுடன் சாதாரண உடையிலிருந்த இரண்டு பெண்களும் ரயில் பயணம் மேற்கொண்டிருந்ததாக அந்தச் செய்தி கூறுகிறது.

தாஜ்மஹாலில் சிவ வழிபாடு- இந்து மகாசபா உறுப்பினர்கள் கைது

டெல்லியிலிருந்து ரூர்கேலா நோக்கிச் சென்றுகொண்டிருந்த ரயில் ஜான்சி ரயில்நிலையம் அருகில் வந்துகொண்டிருந்தபோது, ரயிலில் ஏறிய இரண்டு பஜ்ரங் தள் உறுப்பினர்கள் அந்த இரண்டு பெண்களையும் கன்னியாஸ்திரிகள் கட்டாயமதமாற்றத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பிரச்சனையில் ஈடுபட்டார்கள் என்றும் தி நேஷன்ஒய்டு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது உத்தரபிரதேச மாநிலத்தின் கட்டாய மதமாற்ற தடை சட்டத்துக்கு எதிராக உள்ளது என்று கூறி பஜ்ரங் தள் உறுப்பினர்கள் பிரச்சனையில் ஈடுபட்டதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

நாடகத்தின் தலைப்பு பிடிக்கவில்லை அதனால் எதிர்க்கிறோம்- விஜய் டெண்டுல்கரின் நாடகத்திற்கு பஜ்ரங் தள் எதிர்ப்பு

இந்நிலையில், ஜான்சி ரயில் நிலையத்தில் கன்னியாஸ்திரிகளும் அந்த இரண்டு பெண்களும் ரயிலிலிருந்து இறக்கிவிடப்பட்டு காவல் துறையால் விசாரிக்கப்பட்டனர். பின்னர், முறையான ஆவணங்களைக் காட்டிய பிறகுஅடுத்த நாள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தி நேஷன்ஓய்டு செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பஜ்ரங் தள் உறுப்பினர்களால் அச்சுறுத்தல் உள்ளதால் கன்னியாஸ்திரிகளை அவர்களது மதஉடையை மாற்றிக்கொண்டு இயல்பான உடையில் பயணிக்கக் காவல்துறை கேட்டுக்கொண்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கும்பல்நீதி ஆதிக்கம் – கண்ணை மூடிக் கொள்ளும் இந்தியர்கள்

இதைத் தொடர்ந்து மாற்று உடையில் பயணித்த கன்னியாஸ்திரிகள் தெரிவித்திருக்கும் சைரோ-மலபார் தேவாலயம் , “150க்கும் மேற்பட்ட பஜ்ரங் தள் உறுப்பினர்கள் ஜான்சி ரயில் நிலையத்தில் திரண்டு மிரட்டியுள்ளார்கள் ” என்று தி நஷன்ஓய்டு செய்தி கூறுகிறது.


மேலும் இதுகுறித்து கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேரள கத்தோலிக்க பாதிரியார்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்