Aran Sei

நாடகத்தின் தலைப்பு பிடிக்கவில்லை அதனால் எதிர்க்கிறோம்- விஜய் டெண்டுல்கரின் நாடகத்திற்கு பஜ்ரங் தள் எதிர்ப்பு

த்திய பிரதேசத்தின் பிரபல நாடகஆசிரியர் விஜய் டெண்டுல்கரின் நாடகத்தின் தலைப்பொன்று இந்து மதத்திற்கு எதிராக உள்ளதால் நிகழ்த்தக் கூடாது என்று பஜ்ரங்தள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம், சாட்டார்புர் நகரில் இந்திய மக்கள் நாடக அமைப்பு ஒருங்கிணைத்த நாடகவிழாவில் நிகழ்த்த இருந்த விஜய் டெண்டுல்கரின்       “ஜாட் ஹி புச்சோ சாது ஹை” என்ற நாடகத்தின் தலைப்பு இந்து கலாசாரத்திற்கு எதிராக உள்ளதால் நிகழ்த்தக் கூடாது என்று பஜ்ரங் தள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கும்பல்நீதி ஆதிக்கம் – கண்ணை மூடிக் கொள்ளும் இந்தியர்கள்

இது குறித்து கூறிய பஜ்ரங் தள் அமைப்பு நாடகத்தின் பிரதியைப் படிக்கவில்லை என்றும், சாது (சாமியார்)என்று அந்த நாடகத்தின் பெயர் உள்ளதாலே எதிர்ப்பு தெரிவித்துள்ளோம் என்று கூறியுள்ளதாகவும் தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து தெரிவித்த பஜ்ரங்தள் மாவட்ட தலைவர் சுரேந்திர சிவஹரே, மிரட்டல் விடவில்லை என்றும் காவல் துறையிடம் முறையாக புகார் மட்டுமே அளிக்கப்பட்டது என்றும் கூறியுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. நாடகஆசிரியர் விஜய் டெண்டுல்கரின் இந்த நாடகம் பஹிஜே ஜெடிச்சே என்ற அவரது மராத்தி நாடகத்தின் ஹிந்தி மொழியாக்கமே, இந்த நாடகம் சாதி ஏற்றத்தாழ்வுகள், வர்க்க பாகுபாடு ஆகிவற்றையே பேசுகிறது என்றும் தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாது ஹை நாடகத்தில், மஹிபாத் என்கிற கதாநாயகன் படித்து விட்டு வேலைக்காகப் படும் பாடுகளே பேசப்பட்டுள்ளது என்றும் “ஜாட் ஹி புச்சோ சாது ஹை” நாடகத்தை இயக்கிய சாந்தனு பாண்டே கூறியுள்ளார். மேலும், “சாது என்கிற பெயர் சாமியாரைக் குறிக்கவில்லை என்றும், ‘சஜ்ஜன்'(SAJJAN) நல்ல மனிதன் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

‘தூக்குமேடையை சந்திக்க தயார்’ – உமா பாரதி

நாடகத்தின் இயக்குநர் பாண்டேவும், மக்கள் நாடக அமைப்பின் பொது செயலாளர் ஷிவேந்திர சுக்லாவும் நாடகவிழாவுக்கு காவல் துறையின் பாதுகாப்பு கேட்டதாகவும் ஆனால், காவல்துறை தரவில்லை என்றும் தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாடகத்திற்கு மட்டுமல்லாது பிரேம் ஜன்மேஜயா என்பவரின் நாடகமுமும் பஜ்ரங் தளின் மிரட்டலை அடுத்து நிகழ்த்தப்படவில்லை என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

பிரபல நாடகஆசிரியர் விஜய் டெண்டுல்கரின் நாடகங்கள் இந்தியச் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் காத்திரமாக விமர்சிக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்