உத்தர பிரதேச மாநிலத்தின் மொரதாபாத் மாவட்ட நீதிமன்றம் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ரஷீத் மற்றும் அவரது சகோதரரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்லாமிய இளைஞர்கள் இந்து பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலது சாரிகள், அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள். திருமணத்திற்காக மதம் மாறுவது குற்றம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் 7-வது வழக்கு – கூலித் தொழிலாளி கைது
முன்னதாக, கடந்த டிசம்பர் 4-ம் தேதியன்று, திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் கழித்து , திருமணத்தைப் பதிவு செய்வதற்காகப் பதிவாளர் அலுவலகம் சென்ற தம்பதியை (ரஷித் மற்றும் பிங்கி) தடுத்த பஜ்ரங் தளத்தின் நிர்வாகிகள், அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல் நிலைய வளாகத்திற்குள் 22 வயதான பிங்கி, பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்களால் மிரட்டப்படும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.
உத்தர பிரதேசம் : இந்து முஸ்லிம் திருமணத்தைப் பதிவு செய்ய விடாமல் தடுத்த பஜ்ரங் தளம்
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிங்கி ”எனக்கு 22 வயது ஆகிறது. எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே கடந்த ஜுலை 24-ம் தேதி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்” என்று தெரிவித்தார். திருமணம் செய்து கொள்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருவரும் நண்பர்களாகப் பழகி வந்துள்ளதையும் அவர் கூறிள்ளார்.
உத்தர பிரதேசத்தின் சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டம் பிரிவு 3-ன் கீழ், ரஷித் மீதும் அவரது சகோதரர் மீதும் வழக்கு பதியப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ரஷித்தின் மனைவி பிங்கி, உத்தரப் பிரதேச காவல்துறையால் அரசு காப்பகமான நாரி நிகேதனில் தங்க வைக்கப்பட்டார்.
உபி மதமாற்ற சட்டத்தின் கீழ் கைது – கருச்சிதைவு ஏற்பட்டதாக பெண் குற்றச்சாட்டு
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி பிங்கியை கடந்த 16-12-20 அன்று விடுவித்தார். ஆனால் ரஷித்தும் அவரது சகோதரரும் விசாரிக்கப்படாமல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர்.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிங்கி “நாங்கள் நிம்மதியாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. “நிரபராதிகளான எனது கணவரும் அவரின் சகோதரரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்” எனவும் பிங்கி வலியுறுத்தியிருந்தார்.
உபி மதமாற்ற சட்டத்தின் கீழ் கைது – கருச்சிதைவு ஏற்பட்டதாக பெண் குற்றச்சாட்டு
இந்நிலையில் ரஷீத்தும் அவரது சகோதரரும் கட்டாய மதமாற்றம் செய்ததற்கான எந்த ஒரு ஆதாரத்தையும் காவல்துறை சமர்பிக்காத நிலையில் அவர்களை உடனடியாக விடுவிக்கும் படி மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மதமாற்ற தகவலைத் தர மறுப்பு – நீதிபதிமீது நடவடிக்கை வேண்டும் – குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்
இதைத்தொடர்ந்து, ஒரு குற்றமும் செய்யாமல் ரஷீத்தும் அவரது சகோதரரும் இரண்டு வாரங்கள் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் என, பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.
A muslim man and his brother , in jail for two weeks in west UP’s Moradabad after being booked under UP’s new ‘unlawful conversion’ law , were released this morning . Sources say release after cops found no evidence of forced conversion . Two weeks in jail , for nothing … pic.twitter.com/fvx6CMNSh2
— Alok Pandey (@alok_pandey) December 19, 2020
அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ரஷீத்தின் மனைவி வயிற்று வலியால் அவதிப்பட்டதும், தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.