Aran Sei

உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவருக்கு ஜாமீன் – கொண்டாடப்படவேண்டிய தீர்ப்பா?

பொது குற்றவியல் வழக்குகளுக்கு மாறாக, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பிணைவிடுதலை வழங்குவது விதிவிலக்கானது. வழக்கு நாட்குறிப்பு அல்லது குற்றப்பத்திரிகை மூலமாகக் குற்றம் சாட்ட முகாந்திரம் உள்ளது என நம்புவதற்கு ‘நியாயமான காரணங்களைக்’ காட்ட முடிந்தால் குற்றம் சாட்டப்பட்டவரைப் “பிணையில் விடுவிக்கக் கூடாது”.

பிணை விடுதலைப் பற்றிப் பரிசீலிக்கப் படுவதற்கே கூட, குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கண்ட நிபந்தனையைக் குற்றம் சாட்டியவர் வெளிப்படுத்த முடியவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.

நகைச்சுவை கலைஞர் முனாவரை வெளிவிட மறுத்த சிறை நிர்வாகம்- உச்சநீதிமன்ற தலையீட்டால் நள்ளிரவில் பிணையில் விடுதலை

அதாவது அவருக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு முதல் நோக்கிலேயே உண்மை இல்லை என்பதைக் காட்ட நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும்.

2010 ம் ஆண்டு போடப்பட்ட ஒரு வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் 2019ம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டவரை பிணை விடுதலை செய்ததற்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மேல் முறையீட்டைச் செய்திருந்தது. மத்திய அரசுக்கும், கே.ஏ. நஜீப் என்பவருக்கும் இடையிலான இந்த வழக்கில், இந்திய மக்கள் முன்னணியைச் (PFI) சேர்ந்த சிலர் “நிந்தனைக்கான” விழிப்புணர்வு நீதி என்ற கருதி ஒரு கல்லூரிப் பேராசிரியரின் கைகளை வெட்டிவிட்டனர். அன்றிலிருந்து நஜீப் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் உபா சட்டத்தின் கீழ் விசாரணையைச் சந்தித்து வருகின்றனர்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA): தமிழ்தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த இருவர் கைது

கடந்த திங்கட்கிழமை (31/1/2020) அன்று மத்திய அரசின் மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து விட்டது. இது சமீப காலங்களில் அதன் உத்தரவுகள் மத்திய அரசுக்குச் சாதகமாகவே இருக்கின்றன என்ற பரவலான கருத்திலிருந்து தன்னை தூரத்தள்ளி நிறுத்திக் கொள்ளத் துவங்கி உள்ளது என நம்பிக்கை எழச் செய்கிறது. கடுமையான குற்றங்கள் தொடர்பான சட்டங்களைப் பொறுத்தவரை விசாரணை நீதிமன்றங்கள் கூடுதல் கவனத்துடன் விடயத்தை ஆராயும் என்பது தீர்வு காணப்பட்ட சட்ட நிலைப்பாடு.

2018 ம் ஆண்டு நடந்த ஒரு பிணை வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம், “விசாரணை முகமைகளின் அறிக்கைகளை மட்டுமே கொண்டு” நீதிமன்றம் வழக்கைத் தொடரக் கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், அது “நீதிமன்றங்களை வெறும்  விசாரணை முகமைகளின் அஞ்சல் நிலையமாக” செயல்படுவதாகவே இருக்கும். மேலும் இது “பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதை விடப் பயங்கரவாத நடவடிக்கையால் எழும் சவால்களை எதிர்கொள்வதில் அதிக தீங்கை விளைவிக்கும்,” என்று கூறி உள்ளது.

மேற்கு வங்கத்தில் மோடி பங்கேற்கும் நிகழ்வை புறக்கணித்த மம்தா பானர்ஜி – கடந்த கால அவமதிப்பு காரணமா?

உபா (UAPA) சட்டத்தின் பிரிவு 43-ஈ(5)ன் விதிமுறைப்படி, குற்றவியல் சட்டம் பிரிவு 173 ன் கீழ் ஒருவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் முதல் நோக்கிலேயே உண்மையாக இருக்கும் என்று நம்புவதற்கான சூழல் உள்ளது என்ற கருத்தில் தரப்பட்டுள்ள வழக்கு நாட்குறிப்பு அல்லது அறிக்கைகளைப் பரிசீலனை செய்து நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை தரக் கூடாது என்று கூறுகிறது.

உபா சட்டத்தின் பிரிவு பிணை விடுதலையின்போது 43-ஈ(6)மேற்கூறப்பட்ட விதிமுறைகளின் கட்டுப்பாடுகள் குற்றவியல் சட்டப்பிரிவு அல்லது அப்போது நடைமுறையில் உள்ள எந்தச் சட்டத்தின் கட்டுப்பாடுகளுடனும் சேர்ந்தது எனக் கூறுகிறது.

குற்றவியல் சட்டம் பிரிவு 438 ல் உள்ள கட்டுப்பாடுகளின் படி குற்றவியல் நீதிமன்றம் கீழ்கண்ட காரணிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவை: குற்றச்சாட்டின் தன்மை மற்றும் ஈர்ப்பு; பிணை கோரும் நபரின் முந்தைய குற்றவியல் செயல்கள்; மனுதாரர் நீதியிலிருந்து தப்பி ஓடுவதற்கான வாய்ப்பு; மனுதாரரை கைது செய்வதன் மூலம் காயப்படுத்துவது அல்லது அவமானப்படுத்துவது என்ற நோக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதா என்பன.

தொலைநோக்கு எண்ணம் கொண்ட துடிப்பான தலைவர் மோடி: உச்ச நீதிமன்ற நீதிபதி புகழாரம்

இந்தச் சூழலில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் என். வி. ரமணா, சூர்ய காந்த் மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு வெளியிட்டுள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பில், சிறப்பு சட்டங்களின் கீழ் பிணை வழங்குவது வேறுபட்டது என்றும், சந்தேகப்படும் நபர் முதல் நோக்கில் குற்றம் செய்துள்ளாரென நம்பும்போது பிணையை மறுக்கக் கடமைப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள நஜீப் பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார் என்பதால் பிணையில் விடுவிக்கப்பட்டால் அவர் திரும்பி வரமாட்டார் என்ற நியாயமான அச்சத்தை உதவிக்கு அழைத்து அழுத்தம் தரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமையின் கருத்துப்படி, அது 276 சாட்சிகளை விசாரிக்க வேண்டி உள்ளது என்று கூறியது. இவரோடு குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டு விட்டனர். மேலும் சிலருக்குத் தண்டனைக் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனைத் தரப்படவில்லை. விசாரணைத் தூவங்கியதிலிருந்து நஜீப் ஐந்தரை ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். ஒருமுறை உயர்நீதிமன்றம் பிணை தர முடிவு செய்தபின், அரிய சந்தர்பங்களில் தவிர, அதில் தலையிடக் கூடாது. நீடித்த சிறைவாசம் பதிலளிப்பவரின் விரைவான விசாரணை மற்றும் நீதிக்காக அணுகுவதை மீறுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரது நீண்ட கால சிறைவாசத்தையும், விரைவில் விசாரணை முடிவடைவதற்கான சாத்தியம் இல்லாத நிலையையும் கருத்தில் கொண்டு அவருக்குப் பிணை விடுதலை அளித்துள்ளது. இதற்குப் பிரிவு 43-ஈ(5) ஆல் உருவாக்கப்பட்ட சட்டரீதியான தடையைப் பற்றிக் குறிப்பிடாமல் அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 21 பிரிவைக் காரணம் காட்டியது.

காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள ராணுவம் – மாநிலத்திற்கு அதிகரித்த நிதிச்சுமை

ஷாஹீத் நலச்சங்கத்தின் மத்திய அரசிற்கெதிரான வழக்கில் (1996) இது போன்று வழக்குகளை முடிப்பதில் ஒட்டு மொத்தமாகக் காட்டப்படும் அதிக தாமதம் அரசியலமைப்பின் 21 வது பிரிவைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்துகிறது என்றும், அதன் தொடர் விளைவாக விசாரணையில் இருப்பவர்களைப் பிணையில் விட வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அந்த வழக்கில் தடா(TADA) சட்டத்தின் பிரிவு 20(8) ஐ கருத்தில் கொண்டு பிணை வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கு தேவையற்ற தாமதமின்றி நடைபெறும் என்ற யூகத்தின் அடிப்படையில், பிரிவு 20(8) ன் கடுமையான விதிகளைக் குற்றத்தின் தன்மையைப்  பார்ப்பதை நியாயப்படுத்த முடியும் என்று கூறுகிறது.

ஏஞ்சலா ஹரீஷ் சோன்டாக்கேவிற்கும் மகாராட்டிர அரசுக்கும் இடையிலான வழக்கில் (2016), உபா வின் 43-ஈ(5)இருந்த போதிலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது. இதையே முன்னுதாரணமாகக் கொண்டு சாகர் தாத்யாரம் கார்கேவிற்கு எதிரான மகாராட்டிர அரசின் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் நான்கு ஆண்டுகள் சிறையிலிருந்து விட்டதாலும், இன்னும் 147 க்கும் மேலான சாட்சிகளை விசாரிக்கப்படாமல்  இருப்பதாலும் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது. “மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளைவிட தற்போதைய வழக்கு மிகவும் மோசமானது” என நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்கள் – வருமான வரி வலைக்குள் சிக்க உள்ள விவசாயிகள்

 ஒரு வேறுபாடு

நஜீப் வழக்கிற்கும் வேறொரு உச்சநீதிமன்ற அமர்வு கடந்த ஆண்டு தீர்ப்பளித்துள்ள என்ஐஏ மற்றும் ஜாஹூர் அகமது ஷா வாட்டாலி வழக்கிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை இந்த அமர்வு சுட்டிக்காட்டி உள்ளது. வாட்டாலி வழக்கில் தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை அப்படியே மாற்றி வாட்டாலிக்கு உபா சட்டத்தின் கீழ் பிணை வழங்கியது.

திங்களன்று உச்சநீதிமன்ற அமர்வு,” வாட்டாலி வழக்கு முற்றிலும் வேறுபட்ட உண்மை அணி வரிசையில் கையாளப்பட்டது. அந்த வழக்கில் உயர்நீதிமன்றம்,  சிறப்பு நீதிமன்றத்தின் குற்றம் சாட்டுவதற்குரிய முகாந்திரம் இருப்பதாகக் கூறி  பிணையை நிராகரித்திருந்தது. உயர்நீதிமன்றம் முழு ஆதாரங்களையும் மறுபதிவு செய்து சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தலைகீழாக மாற்றிவிட்டது. உயர்நீதிமன்றம் நடைமுறையில் ஒரு சிறு விசாரணை நடத்தி, சில ஆதாரங்களை ஒப்புக் கொள்ள வேண்டி இருப்பதை தீர்மானித்தது. இது பிணை மனுவின் வரையறுக்கப்பட்ட வரம்பை மீறியதாக இருந்தது.  இது பக்குவப்படாத மற்றும் விசாரணையில் பாகுபாடு காட்டுவதாக இருந்திருக்கலாம்.”

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வழக்குகள்: உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் – மதன் பி.லோக்கூர்

தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் படித்துப் பார்த்த நீதிபதி எஸ். முரளிதர் (தற்போது ஒரிசா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி) அவருடன் நீதிபதி வினோத் கோயலும் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு விரிவான வாய்ப்புகள் அடிப்படையில் பிணை வழங்கியபோது சாட்சிகளை உன்னிப்பாக எடை போடுவதைத் தவிர்த்தது. தனது முடிவுகள் உண்மைகள் மற்றும் சட்டம் ஆகிய இரண்டின் அடிப்படையில் குற்றப்பத்திரிகையை உருவாக்கும் ஒரு பகுதியைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும், இயல்பாகவே முகாந்திரம் உள்ளவை என்றும், வழக்கின் எந்த நிலையிலும் விசாரணை நீதிமன்றத்தின் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்த விரும்பவில்லை என்றும் அந்த அமர்வு தெளிவுபடுத்தி உள்ளது. எவ்வாறாயினும், உபா வின் 43-ஈ(5) போன்ற சட்டரீதியான கட்டுப்பாடுகள் இருந்தாலும் அவை அரசியலமைப்பு நீதிமன்றங்கள், அரசியல் அமைப்புச் சட்டத்தின்  பிரிவு III ஐ மீறும் வகையில் அவை உள்ளதால் பிணை வழங்குவதை தடுக்க முடியாது. என நஜீப் வழக்கில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை நியாயப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் நான்கு ஆண்டுகளில் 400 முறை இணைய சேவை முடக்கம் – ஒரு மணிநேரத்திற்கு ரூபாய் இரண்டு கோடி வரை நஷ்டம்.

” நடவடிக்கைகளைத் தொடங்கும்போது, பிணை வழங்குவதற்கு எதிராகச் சட்டமன்றத் கொள்கைகளை நீதிமன்றங்கள் கவனத்தில் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியாயமான காலத்திற்குள் விசாரணை முடிவடையும் வாய்ப்பு இல்லாத நிலையில், அளிக்கப்பட்ட தீர்ப்புகளின் படியுள்ள சிறைவாசத்தை விட அதிக காலம்  சிறைவாசம் அனுபவித்திருக்கும் நிலையில் அத்தகைய விதிகளின் கடுமையானத் தன்மை மென்மையாகும். இத்தகைய அணுகுமுறை, பிரிவு 43-ஈ(5) போன்றவற்றின் ஏற்பாடுகள் பிணையை மறுப்பதற்கான ஒரே அளவுகோலாக இருப்பதில் இருந்தும் அல்லது விரைவான விசாரணைக்கான அரசியலமைப்பு உரிமையை ஒட்டுமொத்தமாக மீறுவதில் இருந்தும் பாதுகாக்கும்,” என்று அமர்வு கூறி உள்ளது.

திங்கட்கிழமை உத்தரவு ஆதாரங்களை வழிநடத்துவதற்கான அரசின் வாய்ப்பிற்கும், குற்றச்சாட்டுகளை ஐயத்திற்கிடமின்றி நிறுவும் அதே சமயத்தில்  அரசியலமைப்பின் பிரிவு III ன் படி உறுதி செய்யப்பட்டுள்ள  குற்றம் சாட்டப்பட்டவருடைய உரிமைகளைப் பாதுகாக்கவும் வேண்டும் என்பதற்கும் இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்தும் என அமர்வு நம்புகிறது.

‘வெறுப்பின் உருவம்’ – ஆர்எஸ்எஸ் மீதான தடையும், சர்தார் வல்லபாய் பட்டேலும்

அமர்வின் பார்வையில், உபாவின் பிரிவு 43-ஈ(5), போதைப் பொருள் மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தை (NDPS)  விட ஒப்பீட்டளவில் குறைவான கடுமை கொண்டது. என்டிபிஎஸ் ன்  கீழ், குற்றம் சாட்டப்பட்டவர் முதல் நோக்கிலேயே குற்றமற்றவர் மற்றும் பிணையில் இருக்கும்போது மீண்டும் ஒரு குற்றம் செய்யமாட்டார் என்று திருப்தி அடைந்தால்தான் பிணை தர முடியும்.  இது போன்ற முன்நிபந்தனைகள் உபா சட்டத்தில் இல்லையென அமர்வு குறிப்பிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, உபா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள்பிணை வழங்குவதற்கு தகுதி பெற கணிசமான காலம் சிறைவாசம் அனுபவிப்பதைத் தவிர வேறு வழி இல்லையெனப் பரிந்துரைப்பது போல் இருக்கிறது. வாட்டாலி வழக்கில் உச்சநீதிமன்றத்திற்கு  உபாவின் கீழ் பிணை வழங்க மறுப்பதற்கு, தகுதி வாய்ந்த நீதிமன்றத்தின் திருப்தி அளிக்கும் அளவு எளிதானதாக இருக்கலாம். திங்கள் கிழமை உத்தரவு இருக்கும் போதும்,  இந்த விதி தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். ஏனெனில், உபாவின் கீழ் கைதுச் செய்யப்பட்டவர், அவரது நீடித்த சிறைவாசத்தைப் பொருட்படுத்தாமல்  பிணையைப் பெற,  தனக்கு எதிரான குற்றச்சாட்டில் முகாந்திரமாக உண்மை உள்ளது என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது என்று நீதிமன்றத்தை நம்ப வைக்க உரிமை உண்டு. இந்தத் தீர்ப்பு வாட்டாலி வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக மாற்றிவிடவில்லை. அதுகுறித்து நீதிமன்றம் பேச்சளவில் மட்டுமே உள்ளது.

 

www.thewire.in இணைய தளத்தில் வி. வெங்கடேசன் எழுதியுள்ள  கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்