Aran Sei

ஒன்றிய அரசின் அமைச்சகங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் எஸ்சி/எஸ்டி பணியிடங்கள் – 4 ஆண்டுகளில் இருமடங்கு உயர்வு

Image Credits: The Better India

ன்றிய அமைச்சகங்களில் பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டு பிரிவில் நிரப்பப்படாத காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

ஒன்றிய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2016 ஆம் ஆண்டில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவில் உள்ள காலிப் பணியிடங்கள் முறையே 8,223 மற்றும் 6,955 ஆக இருந்தது. அவ்வெண்ணிக்கை, 2019 ஆம் ஆண்டில், முறையே 14,366 மற்றும் 12,612 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம்(அக்டோபர் 6), அரசு பணியிடங்களில் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

நன்றி: New Indian Express

மத்திய பல்கலைக்கழகங்களில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் புறக்கணிப்பு – ஆர்டிஐ தகவலில் அம்பலம் – நவநீத கண்ணன்

அதைத்தொடர்ந்து, வெளியிடப்பட்டுள்ள இத்தரவுகளின்படி, 2019 ஆம் ஆண்டில், எஸ்சி/எஸ்டி பிரிவுகளில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக இருந்ததாக தெரிய வந்துள்ளது. எஸ்சி பிரிவில் காலியாக உள்ள மொத்த பணியிடங்களான 28,345-ல், 13,979 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன, 14,366 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

எஸ்டி பிரிவில் காலியாக உள்ள மொத்த பணியிடங்களான 22,016-ல், 9,404 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 12,612 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

ஒன்றிய அமைச்சகத்தின் கீழ் வரும் பத்து அமைச்சகங்கள்/துறைகளில், எஸ்சி/எஸ்டி மற்றும் ஓபிசியினருக்கான இட ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கண்காணிக்கிறது.

யுபிஎஸ்சி நேர்காணலில் சாதியப் பாகுபாடு – நடவடிக்கை எடுக்க டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் கோரிக்கை

இட ஒதுக்கீட்டில் கீழுள்ள காலியிடங்கள் உட்பட எல்லா காலிப்பணியிடங்களையும் நிரப்புவது ஒரு தொடர்ச்சியான செயற்பாடு என்றும், ஒன்றிய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களைக் கண்டறிந்து, அதை நிரப்ப அந்தந்த அமைச்சகம்/துறைக்குள்ளேயே ஒரு ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இத்தகைய காலியிடங்கள் உருவாகுவதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை முற்றாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை இவ்வாணையத்தின் வழியாக செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒன்றிய அரசின் கீழ் வரும் ஒவ்வொரு அமைச்சகமும் துறையும், இட ஒதுக்கீடு குறித்த உத்தரவுகள் மற்றும் அறிவுறுத்தல்களை முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய துணைச் செயலாளர் மற்றும் அதற்கு உயரிய அதிகாரி ஒருவரை தொடர்பு அலுவலராக நியமிக்க வேண்டும்.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்