Aran Sei

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் மேல்முறையீடு – பாஜக தலைவர்கள் விடுதலைக்கு எதிராக வழக்கு

credits : the wire

1992-ம் ஆண்டு நடந்த  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜகவின் முன்னணி தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட 32 பேரையும் விடுவித்த, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, அயோத்தியைச் சேர்ந்த இரண்டுபேர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரத்தில் 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வெளியானது. அதில், பாபர் மசூதியை இடிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது எனும் குற்றச்சாட்டை நிரூபிக்க, சிபிஐ போதுமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

‘ பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டம் இல்லை ‘ : தீர்ப்பு முழு விபரம்

பாஜகவின் மூத்த தலைவர்களான, எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி உட்பட குற்றம் சட்டப்பட்ட 32 பேரையும் நீதிபதி எஸ்.கே.யாதவ் விடுவித்து உத்தரவிட்டார்.

 

பாபர் மசூதி வழக்கு: தீர்ப்பளித்த நீதிபதிக்குப் பாதுகாப்பை நீட்டிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

இந்த தீர்ப்பு குறித்து பாஜக தலைவர் எல்.கே,அத்வானி “கோடிக்கணக்கான எனது சக நாட்டு மக்களுடன் இணைந்து அயோத்தியில் ஒரு அழகான ராமர் கோயில் கட்டி முடிக்கப்படுவதை எதிர்நோக்கியுள்ளேன்” என்று கூறியிருந்தார்.

‘பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்குத் தண்டனை வேண்டும்’ – எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

முரளி மனோகர் ஜோஷி இந்த தீர்ப்பை “வரலாற்று முடிவு” என்று குறிப்பிட்டார். “டிசம்பர் 6-ம் தேதி அயோத்தியில் நடந்த சம்பவத்திற்கு எந்த சதியும் தீட்டப்படவில்லை என்பதை இது நிரூபிக்கிறது,” என்றும் தெரிவித்திருந்தார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் சதித்திட்டம் – லிபர்ஹான் கமிஷன் கூறியது என்ன?

இந்நிலையில், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியத்தின் சார்பாக, அயோத்தியைச் சேர்ந்த ஹாஜி மஹ்பூப் மற்றும் ஹாஜி சயத் அக்லக் ஆகியோர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில், 32 பேர் விடுவிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளனர்.

பாபர் மசூதியை தொடர்ந்து தாஜ்மஹாலை குறிவைக்கும் வலதுசாரிகள் – காவிக்கொடி ஆட்டியவர்கள் கைது

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விடுவித்தற்கு எதிராக, சிபிஐ உயர் நீதிமன்றத்தை நாடததால், இந்த  தீர்ப்பை எதிர்த்து ஹாஜி மஹ்பூப் மற்றும் ஹாஜி சயத் அக்லக் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய  முடிவு செய்ததாக அவர்களுடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார் என தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்