மேற்குவங்க மாநிலம் தொல்லிகஞ்சே பகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அந்தக் கட்சியின் தொண்டர் ஒருவரை தாக்கிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய அமைச்சரும் ,பாடகருமான பாபுல் சுப்ரியோ மேற்குவங்க மாநிலம் தொல்லிகஞ்சே சட்டமன்ற தொகுதியில் பாஜகவின் சார்பில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.
பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்தவர் கைது – தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை
இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தொலைக்காட்சிக்குப் பேட்டிகொடுக்காமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் எனக்கூறிய பாஜக தொண்டர் ஒருவரை பாபுல் சுப்ரியோ கட்சி அலுவகத்தில் வைத்துக் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
‘மோடியின் தாடி வளர்கிறதே தவிர நாட்டின் பொருளாதாரம் வளரவில்லை’ – மம்தா பானர்ஜி கிண்டல்
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பாபுல் சுப்ரியோ, ” நான் அவரை அறையவில்லை, அறைவதை போலக் கையை உயர்த்தினேன் ” என்று கூறியுள்ளதாக என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.
தொல்லிகஞ்சே சட்டமன்ற தொகுதியில் உள்ள பாஜக அலுவகத்தில் பாபுல் சுப்ரியோவுக்கு, அந்தக் கட்சியின் தொண்டர் ஒருவர் தேர்தல் பிரச்சாரத்தின்போது தொலைக்காட்சிக்கு முகம் காட்டுவதை விட்டுவிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுங்கள் எனக் கூறியதை கேட்டு ஆவேசமடைந்த பாபுல் அவரை கன்னத்தில் அறைவது காணொளியில் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.