Aran Sei

ஆயுர்வேத மருத்துவர்கள் தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் – மத்திய ஆயுஷ் அமைச்சர் கருத்து

credits : the indian express

யுர்வேத மருத்துவர்களும், அறுவை சிகிச்சை செய்வதற்கான பயிற்சியை மேற்கொண்டு வருவதாக, மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்துள்ளார்.

”அலோபதி மருத்துவர்கள் குற்றம் சாட்டுவது போல, இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ முறைகளையும் ஒருங்கிணைக்கும் திட்டம் இல்லை, ஆனால் ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்வதற்கான பயிற்சியை மேற்கொண்டு  வருகிறார்கள்” என அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதா, சித்தா உள்ளிட்ட மருத்துவ முறைகளின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ முறைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப், புதிய முறையில் சிகிச்சையளிக்கும் (Mixopathy) திட்டத்தைக் கொண்டு வரும் நோக்கில், மத்திய அரசு செயல்பட்டு வருவதாக இந்திய மருத்துவ சங்கம் (IMA) குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், ஆயுர்வேத மருத்துவர்கள் சில அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தெரிவிருத்திருந்த நிலையில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக, அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அலோபதி, ஹோமியோபதி உள்ளிட்ட ஒவ்வொரு மருத்துவ முறையையும் தனிதனியாக மேம்படுத்துவதை விடுத்து, மத்திய அரசு அனைத்தையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது” என்று கூறி, அதை எதிர்த்து போராட்டமும் நடத்தியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் அனைத்து மருத்துவ முறையையும் ஒருங்கிணைக்கும் திட்டம் இல்லை எனவும், அலோபதி மருத்துவத்துக்கு உதவி செய்யும் வகையில் இந்தியாவின் மருத்துவ முறைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக, மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபத் நாயக் தெரிவித்துள்ளார்.

“ஆயுர்வேத மருத்துவர்கள் தங்களுடைய படிப்பை முடித்த பின்பு, ஒரு வருடம் பயிற்சி மேற்கொள்கின்றனர். அவர்கள் தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள்” என்று  கூறியுள்ள அமைச்சர் ஸ்ரீபத், பல நூற்றாண்டுகளாக இந்திய மருத்துவ முறை மக்களுக்கு பயன்பட்டு வருகிறது எனவும், ஆயுர்வேத மருந்தின் சூத்திரம் வெகுநாட்களாக மாறாமல் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்