Aran Sei

அயோத்தி ராமர் கோயில் கட்ட மக்களிடம் பணம் மோசடி – கைது செய்து காவல்துறை நடவடிக்கை

த்திரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் மற்றும் கான்பூர் மாவட்டத்தில் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு நிதி வசூல் செய்வதாக மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

கான்பூரின் பார்ரா காவல் நிலையத்தில், பஜ்ரங் தளத்தின் உள்ளூர் பிரமுகர் அளித்த புகாரின் பேரில் இரண்டு நபர்கள்மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 420 (மோசடி) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  குற்றம் சாட்டப்பட்ட சுன்னு பிரகாஷ் திரிபாதி, அசோக் ராஜ்புத் ஆகியோர் அயோதியில் ராமர் கோயில் கட்டுவதற்காகப் போலி ரசீது பயன்படுத்தி மக்களிடம் பணம் வசூலித்ததாக வழக்குப் பதியப்பட்டுள்ளதெனக் கான்பூர் (தெற்கு) காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் புக்கர்  தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சூரப்பா ஊழலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது: கமல்ஹாசனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

விசாரணை நடந்து வருகிறது, நாங்கள் மேலும் சட்ட நடவடிக்கை எடுப்போம்” என்று புக்கர் கூறியுள்ளார்.

உத்திரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாரில், இதே போன்ற வழக்கு பதியப்பட்டுள்ளது. அயோத்தியில் கோயில் கட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் பெயரில் போலி ரசீதுகளைப் அச்சடித்து மோசடியில் ஈடுபட்ட்தற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

முனாவர் ஃபாரூக்கிக்கு ஆதரவாக சர்வதேச கலைஞர்கள் – வழக்கை ரத்து செய்யக் கோரிக்கை

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கும் அவர்களிடமிருந்து நிதி சேகரிப்பதற்கும் முன்னர், அவர்களின் திட்டம் ஆரம்ப கட்டத்தில் தெரியவந்ததால் கைது செய்யப்பட்டனர் என்று மூத்த காவல்துறை கண்காணிப்பளர் புலந்த்ஷாஹர் சந்தோஷ்குமார் சிங் தெரிவித்ததாக தி இந்து கூறியுள்ளது.

அர்னாப் கோசாமிக்கு மீண்டும் பாதுகாப்பு வழங்கிய நீதிமன்றம் – மார்ச் 5 வரை நடவடிக்கை கூடாது என உத்தரவு

போலி நோட்டீஸ் மூலம் ஏமாற்ற முயன்ற தீபக் தாக்கூர் மற்றும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நோட்டீஸை அச்சடித்த அச்சக உரிமையாளரைக் கைது செய்ய முயற்சிகள் நடந்து வருவதாகவும்  காவல்துறை கண்காணிப்பளர் புலந்த்ஷாஹர் சந்தோஷ்குமார் சிங் கூறியதாக அச்செய்தி தெரிவித்துள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்