Aran Sei

‘அயோத்தியில் யோகி ஆதித்யநாத் களமிறக்காதது நல்லதே’- கடும் எதிர்ப்பிருப்பதாக ராமர் கோயில் பூசாரி தகவல்

த்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்தி தொகுதியில் போட்டியிடாதது நல்லதுதான் என்றும் ஏனெனில் அவர் இங்கு நிறைய எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்றும் அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் யோகி ஆதித்யநாத் போட்டியிடக் கூடாது என்று ஏன் பரிந்துரைத்தீர்கள் என்ற கேள்விக்கு, ராம் லல்லாவிடம் (இறைவன் ராமர்) கேட்ட பிறகு இவ்வாறு அறிவுறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

“முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இங்கிருந்து போட்டியிடாதது நல்லதுதான். நான் ஏற்கனவே பரிந்துரைத்தது. கோரக்பூரின் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் அவர் போட்டியிடுவது நல்லது என்று அறிவுறுத்தியிருந்தேன். ராம் லல்லாவிடம் கேட்டுவிட்டுதான் இதை பேசுகிறேன். கோவில் கட்டும் பணியைத் தொடர்ந்து, உள்கட்டமைப்பு திட்டங்களால் அயோத்தியில் வீடுகள் மற்றும் கடைகள் இடிக்கப்பட்டதால், யோகி ஆதித்யநாத்திற்கு எதிர்ப்பு உள்ளது. கோரக்பூரில் அவர் போட்டியிட வேண்டும்” என்று ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.

அயோத்தியும் ஆம் ஆத்மியும்: கெஜ்ரிவாலும் இந்துத்துவாவும்

“அயோத்தி பூசாரிகள் இரண்டுப்பட்டுள்ளனர். சில பூசாரிகளின் வீடுகள் மற்றும் கடைகள் இடிக்கப்பட்டதால், அவர்கள் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக உள்ளனர். இது அவருடைய வேலை (முதலமைச்சர் என்கிற முறையில்) என்று சொல்கிறார்கள். யோகி ஆதித்யநாத் இங்கிருந்து வெற்றி பெற்றிருப்பார், ஆனால் பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தி தொகுதியில் இருந்து யோகி ஆதித்யநாத் களமிறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவரை கோரக்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் நிறுத்த பாஜக தலைமை முடிவு செய்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992ஆம் ஆண்டு தற்காலிக ராமர் கோவிலின் பூசாரியாக சேர்ந்தேன் என்று ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியுள்ளார்.

‘வாரணாசி, அயோத்தி போன்ற இடங்களில் மட்டுமே பிரதமரை காணலாம்; நாடாளுமன்றத்தில் அல்ல’- ப.சிதம்பரம்

மசூதி இடிக்கப்படும் போது நீங்கள் அங்கு இருந்தீர்களா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “நான் அங்கு இருந்தேன். எனக்கு முன்னால்தான் அது நடந்தது. அதற்கு நான் சாட்சி. மூன்று குவிமாடங்களில் வடக்கு மற்றும் தெற்கு குவிமாடங்கள் கர சேவகர்களால் இடிக்கப்பட்டன. ராமரின் சிம்மாசனத்தை என் கையில் எடுத்துக்கொண்டேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மாலை 5 மணிக்கு இடித்து முடிக்கப்பட, பின்னர் கர சேவகர்கள் ஒரு கூடாரம் அடித்து அந்த இடத்தை சமன் செய்தனர் என்றும் இரவு 7 மணிக்கு, நான் ராமர் சிலையை அங்கே வைத்தேன் என்றும் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் நினைவூட்டியுள்ளார்.

உள்ளூர் அரசியல்வாதிகள் அவரிடம் ஆசி பெறத் தொடங்கினார்களா என்ற கேள்விக்கு, “சமாஜ்வாதி கட்சித் தலைவர் பவன் பாண்டேவின் மனைவி என்னிடம் வந்துள்ளார். அவர் சமாஜவாதி கட்சியின் வலுவான வேட்பாளர்” என்று அவர் கூறியுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்