Aran Sei

அயோத்தியில் புதிய மசூதி இட வழக்கு: மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம்

credits : wallpaper tip

யோத்தியில் புதிய மசூதியைக் கட்டுவதற்காக மத்திய அரசு ஒதுக்கியுள்ள ஐந்து ஏக்கர் நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டதாக  தி வயர்  இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின், அயோத்தி நகரத்தில், 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி 1992 ஆம் ஆண்டு கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அதன்பிறகு, 28 ஆண்டுகள் கழித்து பாபர் மசூதி அமைந்திருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பில், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதற்கு மாற்றாக, உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு “முக்கிய” இடத்தில், புதிய மசூதியைக் கட்ட சன்னி வக்ஃபு வாரியத்திற்கு (இஸ்லாமியர் தரப்பிற்கு), ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

குடியரசு தினத்தன்று, அயோத்தியில் மசூதிக்கு அடிக்கல் – தேசிய கொடி ஏற்றி தொடங்கப்பட்டது

அந்த உத்தரவின் படி மத்திய அரசு, அயோத்தியின் சோஹவல் தெஹ்ஸில் உள்ள, தனிபூர் கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. புதிய மசூதியைக் கட்டுவதற்காக, சன்னி வக்ஃப் வாரியத்தால் இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. புதிய மசூதியைக் கட்டுவதற்காக மத்திய அரசு ஒதுக்கிய ஐந்து ஏக்கர் நிலத்தில், கடந்த குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

அயோத்தியில் புதிய மசூதி – குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டு விழா

இதையடுத்து, கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி, டெல்லியைச் சேர்ந்த ராணி பலுஜா, ராணி பஞ்சாபி ஆகிய இருவர், பாபர் மசூதி கட்டுவதற்காக அரசு ஒதுக்கியுள்ள ஐந்து ஏக்கர் நிலம் தங்களுக்குச் சொந்தமானது என அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அயோத்தி: மசூதி கட்டும் நிர்வாகக்குழுவில் அரசைச் சேர்க்க கோரிக்கை – நிராகரித்த உச்ச நீதிமன்றம்

அந்த மனுவில், 1947 ஆம் ஆண்டு நடந்த இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது, தங்களது தந்தை கியான் சந்த், அயோத்தியின் ஃபைசாபாத் மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தார் என்றும், அவருக்கு நாசுல் துறை, தனிபூர் கிராமத்தில் 28 ஏக்கர் நிலத்தை ஐந்து ஆண்டுக்கு வழங்கியதாகக் கூறப்பட்டது.

மேலும், ஐந்து ஆண்டுகளைத் தாண்டியும், அந்த 28 ஏக்கர் நிலைத்தையும் அவர்களது தந்தை கியான் சந்த் தொடர்ந்து பராமரித்து வந்ததால் அவருடைய பெயர் வருவாய்த்துறை பதிவுகளில் சேர்க்கப்பட்டதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.

பாபர் மசூதி வழக்கு: தீர்ப்பளித்த நீதிபதிக்குப் பாதுகாப்பை நீட்டிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

இதன் பின்னர், கியான் சந்தின் பெயர் வருவாய் பதிவுகளிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அதை எதிர்த்து அவர் தந்தை கூடுதல் ஆணையரிடம் செய்த மேல்முறையீட்டில், மீண்டும் அவர் பெயர் வருவாய் பதிவுகளில் சேர்க்கப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி இந்து கூறியுள்ளது.

மதவாதத்தால் தகர்க்கப்பட்ட அயோத்தியின் நல்லிணக்க பாரம்பரியம்

இதையடுத்து மீண்டும் அவர் பெயர் வருவாய் பதிவுகளில் ஒருங்கிணைப்பு அதிகாரியால் நீக்கப்பட்டுள்ளது எனவும், இதை எதிர்த்து அவர் தந்தை செய்த மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படாமேலே, மசூதி கட்டுவதற்காக அரசு ஐந்து ஏக்கர் (அவர்களுடைய 28 ஏக்கர் நிலத்தில் இருக்கும்) நிலத்தை, சன்னி வக்ஃபு வாரியத்திற்கு ஒதுக்கியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அயோத்தியில் புதிய மசூதி – ”அது எங்களுக்குச் சொந்தமான இடம்” – டெல்லி சகோதரிகள் வழக்கு

இந்நிலையில், இன்றைய தினம், இந்த வழக்கு நீதிபதி டி.கே.உபாத்யாய் மற்றும் மனிஷ் குமார் தலைமையிலான அமர்வுக்கு முன் விசாரணக்கு வந்துள்ளது.

“விவசாயிகளுடன் விவாதிக்கத் தயாரா? ” – ஒன்றிய அமைச்சர்களுக்கு டெல்லி முதல்வர் சவால்

இந்த மனுவிற்கு எதிராக வாதாடிய அரசு தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் குமார் சிங், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள இடமும் மசூதி அமைந்திருக்கும் இடமும் வெவ்வேறு என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

‘விவசாயிகள் போராட்டத்தை வன்முறையால் கலைப்பேன்’ – இந்துத்துவா ஆதரவாளர் மீது வழக்கு

இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், தாக்கல் செய்த மனுவைத் திரும்பிப் பெற்றுக் கொள்ளும்படியும் கூறியதாகவும் தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜாமியா வன்முறையின் முதலாண்டு நினைவு : மாணவர்களின் பேரணியைத் தடுத்த காவலர்கள்

மேலும்,  உண்மைகளை சரிவர ஆராயாமால் அவசர கதியில் மனுவைத் தாக்கல் செய்த வழக்கறிஞருக்குக் கடுமையான கண்டனத்தைத் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தி வயர் இணையதளத்தில் வெளியான செய்தி கூறுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்