Aran Sei

‘ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கிய ஊழலில் பாஜகவினருக்கும் தொடர்புள்ளது’ – ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

யோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் நடந்த ஊழலில், பாஜகவை சேர்ந்தவரும் அப்பகுதி மேயருமான ரிஷிகேஷ் உபாத்யாயாவுக்கு தொடர்புள்ளதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘ராமா.. உன் பெயரில் ஊழலா?’ – அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழலென காங்கிரஸ் வேதனை

இதுகுறித்து நேற்றை தினம் டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி, “ராமனின் பெயரால் நடந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை பாஜக காப்பாற்ற முயலுகிறது. பாஜக தலைவர்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார்கள். இதில் பாஜகவை சேர்ந்தவரும் அப்பகுதி மேயருமான ரிஷிகேஷ் உபாத்யாயாவுக்கு மிகப்பெரும் பங்குள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ராமர் கோவில் கட்டுமானக்குழு மக்களிடம் பெற்ற நன்கொடைகள் குறித்து தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

மேலும், உயர்த்தப்பட்ட விலையில் தான் இந்த நிலம் வாங்கப்பட்டுள்ளது என்ற கோயில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராயின் விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சி, அவர்களுக்கு வாங்கப்பட்ட இந்த நிலத்தின் உண்மையான விலை குறித்து தெரியவில்லை என்றால், ஏன் இத்தகைய மோசடியில் ஈடுபட்டனர் என்று கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பிடுகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் ஊழல் – ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சியினர் குற்றச்சாட்டு

இந்நிலையில் டெல்லி மாநில  துணை  முதலமைச்சர் மனிஷ் சிசோடிய ராமர் கோவில் அறக்கட்டளை இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கூறியுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம்: இலங்கை சீதை கோயிலில் இருந்து வரும் கல்

மேலும், இந்த கோவிலுக்கு எண்ணற்ற மக்கள் தங்கள் உழைப்பை தந்திருப்பது பெருமைமிக்கது. ஆனால், பாஜகவின் இந்த செயலால் இந்த பெருமைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்றும் சிசோடிய தெரிவித்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்