Aran Sei

அயோத்தியில் ”ஆசாதி” முழக்கம் – தேச துரோக வழக்கை திரும்பப் பெற்ற காவல்துறை

credits : national herald

த்தர பிரதசேத்தின் கே.எஸ்.சாகேத் டிகிரி கல்லூரியில், ’ஆசாதி’ (விடுதலை) என்று முழக்கமிட்டதற்காக மாணவர்கள் மீது பதியப்பட்ட தேசதுரோக வழக்கு, திரும்ப பெறப்பட்டுள்ளதாக தி குவிண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அயோத்தி மாவட்டத்தில் அமைந்துள்ள அந்த கல்லூரியில், ஏறக்குறைய 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லூரி, அயோத்தியின் ராமஜென்ம பூமிக்கு மிக அருகில் உள்ளது. இந்த கல்லூரியில் மாணவர் சங்க தேர்தல் நடத்த கோரி கடந்த டிசம்பர் 16-ம் தேதி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்ட மாணவர்கள் ”அவதூறான, தேச விரோத கருத்துக்களை” எழுப்பியதாக கல்லூரியின் முதல்வர் காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

`கல்லூரிக் கட்டணத்தைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் – தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவிப்பு

ராமஜென்பூமியில் இருந்து கல்லூரி வெறும் 500 மீட்டர் தூரத்தில் இருப்பதால், தேச விரோத நடவடிக்கைகள் ஏற்படாமல் தடுக்க, நாம் கூர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூறியுள்ள கல்லூரி முதல்வர் ”ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் எழுப்பப்படும் கோஷங்களுக்கு இங்கே அனுமதியில்லை” என்று கூறியதாக நேஷனல் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் 28-ம் தேதி, மாணவர்கள் சுமித் திவாரி, ஷேஷ் நாராயண் பாண்டே, இம்ரான் ஹாஷ்மி, சத்விக் பாண்டே, மோஹித் யாதவ், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 124 ஏ (தேசதுரோகம்), 147 (கலவரம் செய்தல்), 506 (குற்றநோக்கோடு மிரட்டல்), அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என தி குவிண்ட் இணையதளம் கூறுகின்றது.

`தலித் மாணவர்களின் கல்லூரிக் கனவைக் குழிதோண்டி புதைத்தது மோடி அரசு’ – மே 17 இயக்கம்

போராட்டம் தொடர்பாக பேசிய மாணவர்கள், கல்லூரியில் மாணவர் சங்க தேர்தல்கள் நடத்தப்படாததற்கு மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், கல்லூரியின் முதல்வர் மற்றும் தலைவரை நோக்கியே கோஷங்கள் எழுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

கல்லூரிக் கட்டணமாகத் தேங்காய், கீரை கொடுக்கலாம் – பாலித் தீவின் நூதனச் சிந்தனை

2018 ஆம் ஆண்டில் மாணவர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அபாஸ் கிருஷ்ணா யாதவ் இதுகுறித்து கூறும்போது “ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கல்லூரியின் முதல்வர் மற்றும் தலைவரிடமிருந்து ‘ஆசாதி’ வேண்டும் என்று கூறியுள்ளனர். கல்லூரியின் முதல்வர் இதைப் பயன்படுத்தி மாணவர்கள் தேச விரோத கோஷங்களை எழுப்பியதாக கூறுகிறார். கடந்த ஆண்டு, ராமர் கோயில் பிரச்சனை காரணமாக தேர்தல் நடத்த முடியவில்லை. நாடு முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறும்போது மாணவர் சங்க தேர்தலை ரத்து செய்ததால் போராட்டம் நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளார் என நேஷனல் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு – ட்வீட்டுகளுக்காக குணால் கம்ரா, ரச்சிதா தனேஜாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

“ஊழல் நிறைந்த கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக ஆசாதி (விடுதலை) என்ற முழக்கங்களை மட்டுமே நாங்கள் எழுப்பியிருந்தோம். நாங்கள் ஒருபோதும் நாட்டிலிருந்து சுதந்திரம் கேட்கவில்லை. இது மிகக் கடுமையான குற்றச்சாட்டு. எங்கள் கல்லூரி முதல்வர் எங்களை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்த விரும்புகிறாரா?” என்று, மாணவர் இம்ரான் ஹாஷ்மி கேள்வியெழுப்பியதாக தி குவிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

மண்ணையும் மக்களையும் கற்க ஆற்றுப்படுத்திய பேராசான் தொ.ப – மாணவர் அஞ்சலி

இந்நிலையில் இன்று, கே.எஸ்.சாகேத் டிகிரி கல்லூரி மாணவர்கள் மீது பதியப்பட்ட தேசவிரோத வழக்கை, உத்தர பிரதேச காவல்துறை திரும்பப் பெற்றுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்