Aran Sei

‘ஐபிஎல் ஆறுதலா? குடும்பத்தினர் கொரோனாவால் மரண படுக்கையில் இருந்தால் கிரிக்கெட் ஒரு பொருட்டாக இருக்காது’ – ஐபிஎல்லில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய வீரர்

ற்போதைய சூழ்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பலருக்கு ஓர் ஆறுதலாக அமையும் என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படி சொல்பவர்களின் குடும்பத்தில் ஒருவர் கொரோனா நோயுற்று மரண படுக்கையில் போராடிக்கொண்டிருந்தால், கிரிக்கெட்டை ஒரு பொருட்டாகவே ஆக்கி இருக்கமாட்டார்கள் என்று கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆடம் ஜாம்பா கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். இந்தியாவில் தீவிரமாக பரவி கொரோனா தொற்றின் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாடு நெருக்கடியில் இருக்கும்போது ஐபிஎல் அணிகள் செலவழிப்பது ஆச்சரியாக உள்ளது – ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்டரு டை

இதுதொடர்பாக, நேற்று (ஏப்ரல் 27), சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தி நிறுவனத்திடம்  பேசியுள்ள அவர், “நான் இந்த ஐபிஎல் தொடரிலிருந்து விலகுகிறேன். சில வாரங்களாக ஐபிஎல் தொடருக்காக பயோ பபுளில் (பிரதியேக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல்) இருக்கிறோம். ஆனால், நான் இப்போது பாதுகாப்பாக இருப்பதாக  உணரவில்லை. ஒருவேளை இது இந்தியாவாக இருப்பதால் எனக்கு இப்படி நினைக்கத் தோன்றுகிறது என்று நினைக்கிறேன். இந்தியாவில் உள்ள சுகாதாரம் குறித்து சொல்லி வளர்க்கப்பட்டதால், இங்கு மற்ற நாட்டைவிட கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது. அதனாலேயே, இந்த பயோ பபுள் பாதுகாப்பு வளையம் சரியான பாதுகாப்பாக எனக்குத் தோன்றவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

“ஆறு மாதங்களுக்கு முன்பு, துபாயில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது. அங்கு நான் முழுமையான பாதுகாப்பை உணர்ந்தேன். இந்தாண்டும் ஐபிஎல் தொடரையும் துபாயில் நடத்தி இருக்கலாம் என்பது என்னுடைய தனிபட்ட விருப்பம். ஆனால், அதில் நிறைய அரசியல் பிரச்னைகள் உள்ளன என்பது எனக்குத் தெரியும். அடுத்த ஆறு மாதத்தில் இந்தியாவில் இருவது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரும் நடக்கவிருக்கிறது. அது கிரிக்கெட் உலகில் பெரும் பேசு பொருளாகும்.” என்று ஆடம் ஜாம்பா  குறிப்பிட்டுள்ளார்.

‘கொரோனாவிற்கு எதிராக போராடும் என் குடும்பத்திற்கு துணை நிற்க வேண்டும்’ – ஐபிஎல்லில் இருந்து விலகுகிறார் அஷ்வின்

மேலும், “இவை எல்லாவற்றையும் சேர்த்து மொத்தம் ஆறு மாதங்களாகும். அத்தனை காலங்கள் குடும்பத்தைப் பிரிந்திருப்பது என்பது என்னளவில் கடினம். மறுபுறம், பல நாடுகள் விமானப் போக்குவரத்தை தடை செய்து வருகிறது. இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்ற முடிவை நான் எடுத்தேன்.” என்று அவர் விளக்கியுள்ளார்.

“அதாவது தற்போதைய சூழ்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பலருக்கு ஓர் ஆறுதலாக அமையும் என்று பலரும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்படி சொல்பவர்களின் குடும்பத்தில் ஒருவர் கொரோனா நோயுற்று மரண படுக்கையில் போராடிக்கொண்டிருந்தால், கிரிக்கெட்டை ஒரு பொருட்டாக்கி இருக்கமாட்டார்கள்.” என்று ஆடம் ஜாம்பா கூறியுள்ளார்.

Source : Hindustantimes

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்