கொரோனா இரண்டாம் அலையில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்புவதற்கு அந்நாட்டு அரசு தடைவிதித்தது நாட்டின் சிறந்த தேர்வு என்று அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலையில் இந்தியாவில் இறப்பு எண்ணிக்கையும், தொற்றினால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும்நிலையில், இந்தியாவிலிருந்து நாடுதிரும்பும் ஆஸ்திரேலியர்களுக்குச் சிறைத்தண்டனையும், கடுமையான அபராதமும் விதிக்கப்படும் என்று இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்புவதற்கு நாடு திரும்ப அந்நாடு தடை விதித்து அறிவித்திருந்தது.
இந்தியாவிலிருந்து திரும்புபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை – ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு
மேலும், இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 66,000 ஆஸ்திரேலிய டாலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டிருந்தது.
இது ஒரு தற்காலிக முடிவு தான் என்றும், கடுமையான முடிவு என்றும், இந்தியாவின் நிலை மிகமோசமாக உள்ளதாக நினைப்பதாகவும் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு : காலநிலைமாற்றமே காரணம் – விஞ்ஞானிகள் தகவல்
மேலும், இந்தத் தடைகுறித்து தெரிவித்த ஸ்காட் மோரிசன், ” ஆஸ்திரேலியாவில் மூன்றாவது அலை ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் தனிமைப்படுத்துதல் நடைமுறைகள் வலிமையாக உள்ளது. இந்த முடிவானது நாட்டின் சிறந்த ஆர்வத்தின் பேரில் எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா பிரதமரின் இந்தக் கருத்துக்கு அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அந்தோணி அல்பானீஸ் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
We should be helping Aussies in India return not jailing them. Let's fix our quarantine system rather than leave our fellow Australians stranded.
— Matthew Canavan (@mattjcan) May 2, 2021
மேலும், அரசின் இந்த முடிவுகுறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு முக்கிய தலைவர் மாட் கனவன், “இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியர்கள் திரும்புவதற்கே உதவ வேண்டும் சிறைப்படுத்தக் கூடாது” என்று கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.