Aran Sei

இந்தியாவிலிருந்து திரும்புபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை – ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலிருந்து திரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

‘ஐபிஎல் ஆறுதலா? குடும்பத்தினர் கொரோனாவால் மரண படுக்கையில் இருந்தால் கிரிக்கெட் ஒரு பொருட்டாக இருக்காது’ – ஐபிஎல்லில் இருந்து விலகும் ஆஸ்திரேலிய வீரர்

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையால் பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் அதிகரித்து வரும் சூழலில் பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை ரத்து செய்துள்ளது. இதே போன்று ஆஸ்திரேலியாவும் இந்தியாவிற்கு நேரடி விமான சேவையை ரத்து செய்து அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தியாவிலிருந்து வேறு நாடுகளின் வழியாக பலரும் ஆஸ்திரேலியாவுக்கு செல்வது தெரிய வந்துள்ளது. எனவே கொரோனா தொற்று காரணமாக, இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்ப அந்நாட்டு மக்களுக்கு ஆஸ்திரேலியா அரசு தடை விதித்துள்ளது.

நாடு நெருக்கடியில் இருக்கும்போது ஐபிஎல் அணிகள் செலவழிப்பது ஆச்சரியாக உள்ளது – ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆண்டரு டை

மேலும், ஆஸ்திரேலிய குடிமக்கள் இந்தியாவிலிருந்து வந்தால் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 66,000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது வரும் மே 3ஆம் தேதி முதல் நடைமுறை அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

SOURCE; TIMES OF INDIA

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்