Aran Sei

அர்னாப் ஜாமீன் வழக்கு – விமர்சனம் செய்த குணால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு?

credits : the newindian express

ர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதை விமர்சனம் செய்த நகைச்சுவை கலைஞர் குனால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுக்க அட்டார்னி ஜெனரல் கே கே வேணுகோபால் ஒப்புதல் அளித்துள்ளார் .

மும்பையைச் சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளரைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தனி மனித சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் அவருக்குப் பிணை அளிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, பல பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தின் ஒருதலைபட்சமான செயல்பாடு என கூறியுள்ளனர். இதற்கிடையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்த மேடை நகைச்சுவைக்கலைஞர் குனால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படவுள்ளது.

சட்டம் பயிலும் மாணவரான ஸ்கந்த் பாஜ்பாய், குனால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கோரி எழுதிய கடிதத்திற்கு பதிலளித்துள்ள கே கே வேணுகோபால் ”எந்த அடிப்படை நியாயமுமின்றி உச்ச நீதிமன்றத்தை விமர்சிப்பவர்கள்… நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மூலம் தண்டிக்கபடுவார் என்பதை இதன் மூலம் மக்கள் புரிந்து கொள்வர்” என தெரிவித்துள்ளார்.

இதேபோல், வழக்கறிஞர் ரிஸ்வான் சித்திக் மற்றும் புனேவைச் சேர்ந்த வழக்கறிஞரும் குணால் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரக் கோரி  அட்டார்னி ஜெனரலுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

சமீபத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்தித்த முன்னாள் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், குனால் கம்ரா மீது போடப்படும் வழக்கு ”உச்ச நீதிமன்றம் சிந்திப்பதற்கு நேர் எதிரான விளைவை தான் ஏற்படுத்தும்” என எச்சரித்துள்ளார்.

வழக்கறிஞர் சித்திக் தன்னுடைய கடித்தத்தில் “குனால் கம்ராவின் அவதூறான ட்விட்டர் பதிவுகளைக் கண்டிக்காமல் விட்டால், சமூக வலைதளங்களில் லட்சகணக்கான மக்களைப் பின் தொடர்பாளர்களைக் கொண்டுள்ளவர்கள் நீதிமன்றத்தின் மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை வைக்க தொடங்குவர். நீதிமன்றமும் நீதிபதிகளும் எந்தவொரு வழக்கிலும் தங்களுக்கு விருப்பமான முடிவுகளை எடுப்பதில்லை” என கூறியுள்ளார்.

இந்நிலையில் குனால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர அட்டார்னி ஜெனரலான கே.கே.வேணுகோபால் ஒப்புதல் அளித்துள்ளார்.

குனால் கும்ரா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவுகளை குறிப்பிட்டுள்ள கே.கே.வேணுகோபால் “உச்ச நீதிமன்றம் சுதந்திரமான அமைப்பல்ல, பக்கசார்பு உள்ள அமைப்பு. அதில் பணியாற்றும் நீதிபதிகளும் பக்க சார்புள்ளவர்கள். உச்ச நீதிமன்றத்தின் முழு நேர வேலையே ஆளும் பாஜக அரசின் நன்மைக்காகச் செயல்படுவது என கட்டமைப்பது, உச்ச நீதிமன்றத்தின் மீது சுமத்தப்படும் அபாண்டமான குற்றச்சாட்டாகும்” என தெரிவித்துள்ளார்.

குனால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்வதற்கு ஒப்புதல் அளித்த அட்டார்னி ஜெனரல், குனால் கம்ராவின் பதிவுகள் ”நகைச்சுவை என்னும் எல்லையைக் கடந்து உச்ச நீதிமன்றத்தைக் கொச்சைப்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

மேடை நகைச்சுவை நடிகரான குனால் கம்ரா “உச்ச நீதிமன்றம் தான் இந்த நாட்டின் உச்சகட்ட நகைச்சுவை எனவும்“ இதை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என கூறாதீர்கள் வருங்கால மாநிலங்களவை உறுப்பினர் அவமதிப்பு வழக்கு என கூறுங்கள்” என இதையும் பகடி செய்துள்ளார்.

அர்னாப்பை உச்ச நீதிமன்றம் நடத்தியது போல, பாஜக தலைமையிலான அரசாங்கங்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிற பத்திரிகையாளர்கள் அல்லது ஆர்வலர்கள் நடத்தபடாதது ஏன் என சமூக வலைதளத்தில் பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அர்னாபுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பாஜக தலைவர்கள் – பிறருக்கு மௌனம் காப்பது ஏன்?

முன்னதாக, அர்னாப் கோஸ்வாமி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது, அந்த வழக்கை உச்சநீதிமன்றம் அவசர வழக்காக உடனடியாக விசாரித்தது. உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, இதுகுறித்து கேள்வி எழுப்பி உச்சநீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்