Aran Sei

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துங்கள் – அரசியல் சாசன அமைப்புகளுக்கு பத்திரிக்கையாளர்கள் குழு வேண்டுகோள்

Credit: The Wire

சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் சாசன அமைப்புகளுக்குப் பத்திரிக்கையாளர்கள் குழு ஒன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாட்டில் இந்து மதத்திற்கு ஆபத்து இருக்கிறது என்கிற ஒரு போலியான தோற்றத்தை உருவாக்கி இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு கட்டவிழ்க்கப்படுகிறது என 28 பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அடங்கிய குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டதி காஷ்மீர் ஃபைல்ஸ்திரைப்படம், கர்நாடகா ஹிஜாப் சர்ச்சை, சமூக வலைதளங்களில் பெண்களை குறிவைக்கும் புல்லி பாய் போன்ற செயலிகள் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ள பத்திரிக்கையாளர் குழு, இது தொடர்பாக குடியரசு தலைவர், உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் சாசனத்தால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள தன்னாட்சி அமைப்புகள் தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

இந்த அனைத்து சம்பவங்களை ஒன்றிணைத்து பார்க்கும் போது, நாட்டில் இந்து மதத்திற்கு ஆபத்து என்ற தோற்றத்தை உருவாக்குவதன் மூலம், இஸ்லாமியர்களால் இந்துக்களுக்கு அச்சுறுத்தல் என்ற தோற்றம் கட்டமைக்கப்படுகிறது. நமது அரசியலமைப்பு, சட்டப்பூர்வ மற்றும் ஜனநாயக அமைப்புகளின் தலையீட்டின் மூலம் மட்டுமே இந்த போக்கை தடுக்க அல்லது நிறுத்த முடியும்என அவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டில் சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் குறித்து இந்திய அரசியல் சாசன அமைப்புகள் அவர்களின் கடமையை நிறைவேற்ற வேண்டும் என நாடு முழுவதும் உள்ள ஊடகவியலாளர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Source: The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்