Aran Sei

தீர்ப்புக்காக நீதிபதிகள் மேல் நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் ஆபத்தானவை – உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி. பர்திவாலா

நீதிபதிகள் மீதான தனிப்பட்ட தாக்குதல்கள் ஆபத்தான சூழ்நிலைக்கு இட்டுச் செல்கின்றன என்று முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா முழு நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி. பர்திவாலா கூறியுள்ளார்.

நூபுர் ஷர்மாவின் மனு விசாரணையின் போது அவருக்கு எதிராக கருத்து தெரிவித்த நீதிபதி பர்திவாலா மற்றும் நீதிபதி சூர்யா காந்த் இருவரும் சமூக ஊடகங்களில் விமர்சனத்திற்கு ஆளானார்கள்.

நாடு முழுவதும் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் ஒருங்கிணைத்து டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று கோரி நூபுர் ஷர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

”தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்; பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள்” – ஆ.ராசா

தனது மனுவில், தானும் தனது குடும்பத்தினரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு பாதுகாப்பு தேவை என்றும் அவர் கூறியிருந்தார்.

நுபுர் ஷர்மாவை ஏன் கைது செய்யவில்லை என்றும், “நாடு முழுவதும் உணர்ச்சிகளைத் தூண்டியதற்கு”அவர் ஏன் பொறுப்பேற்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.  இதனால் நீதிபதிகள் விமர்சனத்திற்கு ஆளானார்கள்.

இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி. பர்திவாலா, இந்தியாவில் சட்டம் மற்றும் அரசியல்சாசன பிரச்சினைகளை அரசியல் ஆக்குவதற்கு சமூக ஊடகங்களும், டிஜிட்டல் ஊடகங்களும் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. தேவையற்ற தலையீடு நீதி வழங்கல் அமைப்பில் டிஜிட்டல் மீடியாவின் விசாரணைகள், தேவையற்ற தலையீடு ஆகும்.

உதய்பூர் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் தொடர்பா? – பாஜக தனது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல்

இந்த தளங்களில் பல நேரங்களில் லட்சுமண ரேகையை தனிப்பட்டவர்களுக்காக கடப்பது என்பது ஆபத்தானது. அரசியல் சாசனத்தின் கீழ், நாட்டில் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க, டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்கள் கட்டாயம் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். தீர்ப்புகளுக்காக நமது நீதிபதிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் ஆபத்தான சூழ்நிலைக்கு கொண்டு சென்று விடும். இதனால் சட்டம் உண்மையில் என்ன உத்தரவிடுகிறது என்பதை காட்டிலும், சமூக ஊடகங்கள் என்ன நினைக்கின்றன என்பதை அறிவதில் நீதிபதிகள் பெரிய அளவில் கவனத்தை செலுத்த வேண்டியதாகி விடும்.

நீதித்துறை தீர்ப்புகள், பொது கருத்தின் பிரதிபலிப்பாகி விட முடியாது. பொது உணர்வைக்காட்டிலும், சட்டத்தின் ஆட்சிதான் மேலோங்கி நிலை நிறுத்தப்பட வேண்டும். ஒரு புறம் பெரும்பாலான மக்களின் உணர்வை சமநிலைப்படுத்துவதும், அதன் கோரிக்கையை சந்திப்பதும், இன்னொரு புறம் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதும் கடினமானதாகும்.

இவ்விரண்டுக்கும் இடையே, கயிற்றில் நடப்பதுபோல செயல்படுவதற்கு நீதித்துறைக்கு மிக தேர்ந்த கைவினைத்திறன் தேவைப்படுகிறது. பாதிதான் உண்மை சமூக ஊடகங்களும், டிஜிட்டல் ஊடகங்களும் பாதியளவு உண்மையையே கொண்டிருக்கின்றன. ஆனால் இவை நீதித்துறை செயல்முறையை ஆராயத்தொடங்கி விடுகின்றன.

திரௌபதி முர்மு! ரப்பர் ஸ்டாம்ப் குடியரசுத் தலைவராக இருக்க மாட்டேன் என்று உறுதியளியுங்கள் – யஷ்வந்த் சின்ஹா ​

சமூக ஊடகங்களும், டிஜிட்டல் ஊடகங்களும் இப்போது, தீர்ப்பின் மீதான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை தெரிவிப்பதற்கு பதிலாக நீதிபதிகள் மீதான தனிப்பட்ட கருத்துகளை வெளிப்படுத்த தொடங்கி விடுகின்றன. சமூக ஊடக விவாதங்களில் நீதிபதிகள் பங்கேற்க கூடாது. நீதிபதிகள் ஒருபோதும் தங்கள் நாவினால் பேசுவதில்லை. அவர்கள் தீர்ப்புகள் மட்டுமே பேசப்பட வேண்டும். நீதித்துறையானது சமூகத்தை சாராமல் இருக்க முடியாது  என்று உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.பி. பர்திவாலா தெரிவித்துள்ளார்.

Source: NDTV

Veerappan கூட்டாளிகளின் உண்மைநிலை இதுதான் Tada Rahim | 18 Years Jail Experience | கைதியின் டைரி – 04

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்