பூங்காவிற்கு ஒன்றாகச் செல்ல முயன்றதற்காக, வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த பெண்ணையும் ஆணையும் தாக்கியதாக மூன்று பேரை பெலகாவி காவல்துறையினர் கைது செய்தனர் .
கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர் தாவூத் கத்தீப் மற்றும் அவரது நண்பர்கள் முகமது அயூப் மற்றும் யூசுப் பதான் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அக்டோபர் 8, அன்று நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்றுதான் காவல்துறையினர் (அக்.19) மூவரைக் கைது செய்துள்ளனர்.
இருவேறு மதநம்பிக்கையுடையவர்கள் மேல் தாக்குதல் நடத்தப்பட்டு கொலை மிரட்டலுக்கு ஆளாகியுள்ளனர். திருமணமான இஸ்லாமியப் பெண், பெலகாவியில் உள்ள அந்த நபரிடம் இருந்து சிறிது பணம் பெற வந்துள்ளார். இஸ்லாமியர் அல்லாதவரோடு செல்ல வேண்டாம் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், பாலியல் தொழில் செய்வதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த இருவரும், பெலகவி பேருந்து நிலையத்தில் இறங்கிய பிறகு தாவூத் கத்தீப்பின் ஆட்டோவில் ஏறியுள்ளனர். பூங்காவுக்கு அழைத்துச் செல்லுமாறு அவர்கள் கூறியுள்ளனர். பெண் புர்கா அணிந்திருப்பதையும், பையன் நெற்றியில் பொட்டுவைத்துள்ளதையும் ஆட்டோ ஓட்டுனர் கண்டுள்ளார். அவர்களைப் பூங்காவிற்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக அமன் நகரில் உள்ள ஒரு காலி இடத்திற்கு தம்பதியரை அழைத்துச் சென்றுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆணையும் பெண்ணையும் அடித்துள்ளனர்.
பெட்ரோல் 200-ஐ எட்டினால் இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்ல அனுமதி – அசாம் பாஜக தலைவர்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரிடமும் ஏடிஎம் கார்டுகள், மொபைல் போன் மற்றும் ₹ 50,000 ரொக்கத்தையும் கொள்ளையடித்து சென்றதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து இந்த பொருட்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Source: the hindu
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.