Aran Sei

“கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டது உண்மை” – பியூஷ் கோயல் கருத்துக்கு பிணராயி விஜயன் பதில்

த்திரபிரதேசத்தில் கேரளாவைச் சேர்ந்த கன்னியஸ்திரிகள் மீதான தாக்குதல் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலின் பேச்சு, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை காட்டுவதாக, கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் கூறியுள்ளார்.

காசர்கோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த பிணராயி விஜயன், ”உத்திரபிரதேசத்தில், ரயிலில் கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை, அது ஒரு பொய் குற்றச்சாட்டு என பியுஷ் கோயல் கூறினார். ஆனால் அவர் கூறுவது தவறானது. கன்னியாஸ்திரிகள் என்பதற்காகவே அவர்கள் தாக்கப்பட்டனர்” என தெரிவித்தார்.

”மம்தா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மேற்குவங்கம் பாகிஸ்தானாக மாறிவிடும்” – வாக்காளர்களை மத ரீதியாக ஒருங்கிணைக்கும் பாஜக

மேலும், கொரோனா தடுப்பூசி பணிகள் முடிவடைந்ததும், கேரளாவில் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், குடிமக்களை மதரீதியாக பிளவுபடுத்தும் அந்தச் சட்டத்தை, கேரளாவில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்பதில் கேரள அரசு உறுதியாக இருக்கிறது என்றும் பிணராயி விஜயன் தெரிவித்தார்.

மக்களின் ஒற்றுமை என்பது எந்த ஒரு நாட்டின் வலிமையும் ஆகும். அந்த ஒற்றுமையை உடைக்கும் எந்த நடவடிக்கையும், இடது ஜனநாயக முன்னணியால் நிராகரிக்கப்படும் என பிணராயி விஜயன் கூறினார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்