மதவெறி மிகவும் கவலையளிக்கிறது. குறிப்பாக இந்து, பௌத்தம், சீக்கிய மதங்களுக்கு எதிரான தாக்குதல் மோசமானது என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, சமகால மதவெறி, குறிப்பாக இந்து, பௌத்த எதிர்ப்பு மற்றும் சீக்கியர்களுக்கு எதிரான வெறுப்புகள் தோன்றுவது தீவிர கவலைக்குரிய ஒன்று என்றும், இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஐநாவின் கவனம் தேவை என்றும் தெரிவித்துள்ளார். .
ஐக்கிய நாடுகளின் நாகரிகங்களின் கூட்டமைப்பு (UNAOC) ஏற்பாடு செய்த சர்வதேச சகோதரத்துவ தினத்தை முன்னிட்டு எகிப்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நிரந்தர தூதரகங்களுடன் இணைந்து ஐ.நா.நடத்திய மெய்நிகர் நிகழ்வில் டி.எஸ். குருமூர்த்தி பேசியுள்ளார்.
தலிபான்கள் 2001 இல் பாமியானில் புத்தரின் 6 ஆம் நூற்றாண்டு சிலைகளை அழித்துள்ளனர். தலிபான் முன்னாள் தலைவர் முல்லா முகமது உமர், டாங்கிகள் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்தி மிகப்பெரிய மலைப் பகுதிகளில் செதுக்கப்பட்ட பிரமாண்டமான புத்தர் சிலைகளை உடைக்க உத்தரவிட்டார்.
மதவெறி எதிராக உறுதியாக நிற்கவும், நமது பன்முகத்தன்மை நம் அனைவரையும் பலப்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதர் டி.எஸ்.திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.