Aran Sei

அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் தாக்குதல்: அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

Credit: NDTV

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி காவல்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வாரத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற சம்பவத்தில், ஒழுங்கற்ற கூட்டம் ஒன்று தேவையற்ற அச்சத்தை உருவாக்க முயன்றது என்றும் அதைத் தடுப்பதற்கு அங்குப் போதுமான எண்ணிக்கையில் காவல்துறையினர் இல்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் சவுரப் பரத்வாஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்துள்ள தலைமை நீதிபதி விபின் சங்கி மற்றும் நவீன் சாவ்லா அடங்கிய அமர்வு, சீலிடப்பட்ட கவரில் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு 2 வார கால அவகாசம் அளித்துள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை தாக்கிய பாஜகவினர் – கொல்ல சதி என டெல்லி துணை முதலமைச்சர் குற்றச்சாட்டு

”சிலர் சட்டத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டனர். அங்கு ஒரு பயம் உருவாக்கப்பட்டது. அது தெளிவாகத் தெரிகிறது. கூட்டத்தினர் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். ஆனால், காவலர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. இதனால், அவர்களால் கூட்டத்தினரை தடுக்க முடியாமல் போனது” என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா, சம்பவம் நடைபெற்ற இடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்  இருந்த காணொளி இருக்கும் போதும், அவரின் பெயரிடப்படாத முதல் தகவல் அறிக்கையைப் பதியப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

டெல்லி காவல்துறை தொண்டு செய்யவில்லை என்றும், இதைப் போன்று பிரதமரின் இல்லத்திற்கு வெளியே சம்பவங்கள் நடைபெற்றிருந்தால், அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்றும் ராகுல் மெஹ்ரா வாதிட்டார்.

சிரித்துக் கொண்டே சொல்வது வன்முறை கருத்தாகாது – டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து

சவுரப் பரத்வாஜ் சார்பில் ஆஜரான மற்றொரு வழக்கறிஞர் பரத் குப்தா, ”சம்பவத்திற்கு டெல்லி காவல்துறையினர் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே, சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைக்க வேண்டும்” என கோரியுள்ளார்.

வழக்கை ஏப்ரல் 25 தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்