Aran Sei

மாவட்ட தன்னாட்சி கவுன்சில் மசோதா – மணிப்பூர் பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்

மாவட்ட தன்னாட்சி  கவுன்சில் மசோதா, 2021 மீது விவாதம் நடத்த வேண்டும் என்ற பழங்குடியினரின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, மணிப்பூர்  அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் அறிவித்த வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளதால், கனரக வாகனங்கள் உள்ளிட்ட வணிக வாகனங்கள் மணிப்பூர் மாநில சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான வணிக வாகனங்கள் மலை நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. அண்டை மாநிலமான அசாமில் இருந்து பல்வேறு பொருட்களை ஏற்றி வர, மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் இருந்து காலி லாரிகள் எதுவும் வரவில்லை.

விவசாயிகளை காலிஸ்தான்களுடன் ஒப்பிட்ட கங்கனா – குருத்வாரா நிர்வாகக் குழு எதிர்ப்பு

பழங்குடியின அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் என்.பிரேன், இக்கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் நாடாளுமன்றத்திற்கே அதிகாரம் என்றும் கூறியுள்ளார்.

ஆனாலும், மணிப்பூர் சட்டபேரவையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி இந்த மசோதாவை விவாதித்து, அது குறித்த பரிந்துரைகளை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதே எங்களில் தற்போதைய கோரிக்கை என்று மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

‘திரிபுராவில் தொடர்கதையாகும் வன்முறைகள்’ – அமித்ஷா அலுவலகத்தை முற்றுகையிட்ட திரிணாமூல் எம்பிகள்

அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளும் சங்கங்களும் இந்த மசோதாவை எதிர்ப்பதோடு, மணிப்பூர் மாநிலம் துண்டாடப்படும் என்றும் அரசாங்கத்திற்குள் ஒரு அரசாங்கத்தை உருவாக்கவே இது உதவும் என்றும் எச்சரித்துள்ளன. மணிப்பூர் ஐக்கிய கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மசோதாவை அனைத்து வகையிலும் எதிர்க்க தேவையான ஆயத்தங்களும் நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோயின் தாக்கத்திலிருந்து மணிப்பூர் மாநிலம் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகவும், வேலை நிறுத்தங்களை சுமத்துவது மக்களுக்கு பயன் தராது என்றும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத பழங்குடி அமைப்புகள் கூறியுள்ளன.

Source: The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்