Aran Sei

மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது தூப்பாக்கிச்சூடு; 7 பேர் உயிரிழப்பு – ராணுவம், காவல்துறை அட்டூழியம்

மியார்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்திருப்பதாக அரசியல் மற்றும் ஊடக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 1 ஆம் தேதி, மியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம், மக்களால் தேர்தேடுக்கப்பட்ட ஆட்சியின் தலைவர் ஆங் சான் சூ கி மற்றும் அவரது கட்சியினரை தடுப்பு காவலில் வைத்ததில் இருந்து அந்நாட்டில் குழப்பம் நிலவி வருகிறது.

முன்னதாக நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், அது தொடர்பாக முறையான விசாரணை வேண்டும் என்றும் ராணுவம் கோரியிருந்தது.

‘9.5 சதவீத வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என்கிறாரா ராமதாஸ்?’ – திருமாவளவன் கேள்வி

ஐம்பது ஆண்டுகால ராணுவ ஆட்சிக்குப் பிறகு ஜனநாயகத்தை நோக்கிய நடவடிக்கைகளைத் தடுக்கும் விதமாக ராணுவ ஆட்சி அமைந்ததை அடுத்து, பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதோடு, மேற்கத்திய நாடுகளும் கண்டங்களைத் தெரிவித்துள்ளன.

”மியான்மர் ஒரு போர்க்களம் போல் உள்ளது” என அந்நாட்டின் முதன்மை கத்தோலிக்க குரு சார்லஸ் மவுங் போ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

யாங்கோன் நகரின் பல பகுதிகளில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு, கைக்குண்டு, கண்ணீர்புகை குண்டு ஆகியவற்றை பயன்படுத்தியுள்ளனர். காவல்துறையினருக்கு ஆதரவாக ராணுவ வீரர்களும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் திமுக கூட்டணி 162 இங்களில் வெற்றி பெறும் – ஏபிபி, சி-வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவு

ஆசிரியர்கள் போராட்டத்தில் கைக்குண்டு வீசப்பட்டதில், பெண் ஆசிரியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அவரது மகள் மற்றும் சக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு மியான்மரின் டேவியில், காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்திருப்பதாக, அரசியல் செயல்பாட்டாளர் க்யாவ் மின் ஹ்டிகே தெரிவித்துள்ளார்.

அரசு தொலைக்காட்சியான எம்.ஆர் டிவி வெளியிட்டுள்ள செய்தியில், சனிக்கிழமை (பிப்ரவரி 27) நாடு முழுவதும் 470 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளாக சிறையில் உள்ள காஷ்மீர் பத்திரிகையாளர் – ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஹாலிவுட் நடிகரின் அறக்கட்டளை

ராணுவ ஆட்சியை திரும்ப பெற, ஐக்கிய நாடுகள் சபை அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என அதற்கான தூதர் கூறியதை அடுத்து, நாட்டிற்கு துரோகம் செய்த குற்றத்திற்காக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நவம்பரில் மக்கள் அளித்த வாக்குகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என சூகியின் கட்சியினர் மற்றும் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

75 வயதான சூகி மீது, ஆறு வாக்கி-டாக்கி ரேடியோக்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தார், கொரோனா வைரஸ் நெறிமுறைகளை மீறி இயற்கை பேரழிவு சட்டத்தை மீறினார் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்கின் விசாரணை திங்களன்று (மார்ச் 1) விசாரணைக்கு வர உள்ளது.

Sources: Reuters

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்