Aran Sei

‘ஒன்றிய அரசால் தேவையான அளவு தடுப்பு மருந்துகளை வழங்க முடியவில்லை’ – நோபல் பரிசு பெற்ற அறிஞர் அபிஜித் பானர்ஜி

ன்றிய அரசால் இந்திய மக்களுக்குத் தேவையான போதுமான அளவு தடுப்பூசிய வழங்கமுடியவில்லை என நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில கொரோனா கட்டுப்பாட்டுக் குழுவின் உறுப்பினரான பானர்ஜி, இந்தியாவில் கொரோனா மேலாண்மை தொடர்பாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்த பின்பு இதனை கூறியுள்ளார்.

“இங்கிருக்கும் முக்கியமான பிரச்னை என்னவென்றால், நாடு முழுவதற்கும் தேவையான அளவு தடுப்பூசிகளை வழங்கும் திறன் ஒன்றிய அரசிடம் இல்லை. வாக்குறுதியளிக்கப்பட்ட விநியோக அளவை நாம் எட்டவில்லை.”என அவர் தெரிவித்த்துள்ளார்.

மேலும் ஒன்றிய அரசு வழங்கி வரும் தடுப்பூசிகளை மேற்கு வங்கம் திறம்பட பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்க அரசுக்கு எதிராக ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

”சிறிய மாநிலமான குஜராத்திற்கு இரண்டு மடங்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதில் எங்களுக்குப் பிரச்னை இல்லை. எங்களுக்குப் போதிய தடுப்பூசி கிடைக்காமல், மக்கள் துன்பப்படுவதில் தான் பிரச்னை உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்திற்கு போதுமான அளவு தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என அவர் அந்த கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உத்திரபிரதேசம், குஜராத், கர்நாடகா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்குகிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கோ அல்லது வேறு மாநிலங்களுக்கோ அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் வழங்கப்படுவதில் பிரச்னையில்லை. ஆனால், மேற்கு வங்கத்திற்கு அநீதி இழைக்கப்படும்போது வாய் மூடிப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த 14 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும் நிலையில், 2.8 கோடி தடுப்பூசிகள் மட்டுமே இதுவரை ஒன்றிய அரசால் வழங்கப்பட்டிருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்