Aran Sei

லக்கிம்பூர் வன்முறை: பதவி விலக கோரி ஒன்றிய அமைச்சரின் வாகனம் மீது காங்கிரஸ் மாணவர்கள் அணி முட்டை வீச்சு

க்கிம்பூர் கெரி வன்முறையில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஈடுபட்டதாகக் கூறி, புவனேஷ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அஜய் மிஸ்ராவாகனம் மீது காங்கிரஸ் கட்சியினர் முட்டைகளை வீசியதோடு கருப்புக் கொடிகளையும் காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இன்று(அக்டோபர் 31), ஒடிசா மாநில தலைநகர் புவனேஷ்வரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அஜய் மிஸ்ரா வருகை தந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் மாணவர்கள் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் யாசிர் நவாஜ், “ஒடிசாவுக்கு வருகைத் தரக்கூடானெ நாங்கள் அவரை முன்பே எச்சரித்தோம். காங்கிரஸ் கட்சி அவரது வருகைக்கு முட்டைகளை வீசி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு வருகை தந்தாலும், நாங்கள் எதிர்ப்போம்” என்று கூறியுள்ளார்.

மேலும், விவசாயிகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மகனுக்கு தொடர்பு உள்ளதால், ஒன்றிய அமைச்சர் பதவியை அஜய் மிஷ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்று நவாஜ் வலியுறுத்தியுள்ளார். 

அக்டோபர் 3 ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் விவசாயச் சட்டங்களை நீக்கக் கோரி நடந்த விவசாயிகளின் போராட்டத்தில் நடந்த வன்முறையால், எட்டு பேர் உயிரிழந்தனர். இவ்வன்முறை தொடர்பான வழக்கில், அஜய் மிஸ்ராவின் மகன் அஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

Source: New Indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்