Aran Sei

தடுப்புமருந்து குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் : பங்கேற்க மறுத்து வெளியேறிய பாஜக எம்.பிக்கள்

கொரோனா தடுப்பு மருந்து மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான, நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தை ஒத்திவைக்கக் கோரி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளதாக  தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

‘கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை மூடி மறைக்கும் உத்தரபிரதேச பாஜக அரசு’ – அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

கொரோனா தடுப்பு மருந்து மேம்பாடு மற்றும் கொரோனா வைரஸ் மற்றும் அதன் வகைகளின் மரபணு வரிசைமுறை’ என்ற பொருண்மையில் நடந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தின்போது, இந்தத் தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் கூட்டத்தை ஒத்தி வைக்கக் கோரியதாக அந்தச் செய்தி கூறுகிறது.

பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது கொரோனா தொற்று நிலவி வரும் சூழலில் ‘தடுப்புமருந்து மேம்பாடு’ குறித்து பேசச் சரியான சூழல் இது இல்லை என்று தெரிவித்து, இந்தக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென கூறியதாகவும் தி இந்து செய்தியில் தெரிவித்துள்ளது.

ஒன்றிய அரசு கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் பேரழிவு தரக்கூடியதாக உள்ளது – ராகுல்காந்தி

இந்நிலையில், இந்தக் குழுவின் தலைவரான, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஜெயராம் ரமேஷ் கூட்டத்தை ஒத்தி வைக்க முடியாதென தெரிவித்த நிலையில், பாஜக உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்த கோரியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில், 11 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும், 7 எதிர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாஜக உறுப்பினர்களின் இந்தக் கோரிக்கைக்குப் பதிலளித்த ஜெயராம் ரமேஷ்,”நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் எப்போதும் உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் தான் நடக்கும், வாக்களிக்கும் நடைமுறை இல்லை” என்று கூறி அவர்களது கோரிக்கையை நிராகரித்ததாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் கருணைத் தொகை கோரும் வழக்கு – தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்.

மேலும், இதுகுறித்து கூட்டத்தில் பேசிய எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4 லட்சம் மக்கள் கொரோனவால் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா பெருந்தொற்று குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுவது அத்தியாவசியமானதும், உடனடியாகச் செய்யப்பட வேண்டியதுமாகும் என்று தெரிவித்து கூட்டம் தொடர வேண்டுமென கூறியதாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

இதனைத்தொடர்ந்து, பாஜக உறுப்பினர்கள் அந்தக்கூட்டத்திலிருந்து வெளியேறியதாக  தி இந்து செய்தி கூறுகிறது.

இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே விஜயராகவன்; உயிரிதொழில்நுட்பத் துறையின் செயலர், ரேணு ஸ்வரூப், சி.எஸ்.ஐ.ஆர் இயக்குநர் (அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில்) டாக்டர் சேகர் சி. மண்டே; கொரோனவுக்கான தடுப்பு மருந்து நிர்வாகம்  குறித்த, தேசிய நிபுணர் குழுவின் தலைவரும் நிதி அயோக் உறுப்பினருமான டாக்டர் வி.கே. பால் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டதாகவும் தி இந்து செய்தி குறிப்பிடுகிறது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்