Aran Sei

விவசாயிகள் போராட்ட களத்தில் தியாகிகள் தினம் அனுசரிப்பு – விவசாய சங்கம் அறிவிப்பு

விவசாயிகள் போரட்டம் நடைபெற்று வரும் போராட்டக் களங்களில் பகத் சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோரை தூக்கிலிட்ட தினத்தைத் தியாகிகள் தினமாக கொண்டாட விவசாயிகள் முடிவு செய்திருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அம்மூவரை தூக்கிட்ட மார்ச் 23 ம் தேதியன்று, போராட்டம் நடைபெற்று  வரும் திக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில்  தியாகிகள் தினம் பெரிய அளவில் கடைபிடிக்கப்படும் என விவசாயிகள் கூறியிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாப் மாநிலம் முழுவதும் உள்ள 32 விவசாய சங்கங்களின்  போரட்டக் களங்கள், பாரதிய கிசான் சங்கத்தின் (உக்ரஹான்)  போராட்டக் களங்கள் மற்றும் கிசான் மஸ்தூர் சங்கரஷ் கமிட்டியின் போராட்டக்களங்கள் உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட போராட்ட தளங்களிலும் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படும் என அவர்கள் தெரிவித்திருப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராக பேசிய பெண் உறுப்பினர்- மிரட்டல் விடுத்த சிவசேனா உறுப்பினர்

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மீதான சுரண்டல் குறித்து பகத்சிங்கின் கருத்துக்கள் அனைத்து போராட்டக் களங்களிலும் முன்னிலைப்படுத்தப்படும் என சம்யுக்ட் கிசான் மோர்ச்சா சார்பாக, கிராந்திகாரி கிசான் யூனியனின் தலைவர் டாக்டர் தர்ஷன் பால் கூறியிருப்பதாக தி இந்தியன் எகஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், “பகித் சிங்கின் சித்தாந்ததை முன்னிறுத்துவதோடு, மார்ச் 26 ஆம் தேதி நடைபெற இருக்கும் பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்தும், பகத் சிங் பிறந்த கிராமமான, கட்கர் காலனி, ஹிசார், மதுரா ஆகிய பகுதிகளில் இருந்து டெல்லியை நோக்கிய நடைபயணம் தொடங்கப்பட்டு இருக்கிறது” என அவர் தெரிவித்திருப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அகமதாபாத் – மும்பை புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிர்ப்பு: நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக விவசாயிகள் புகார்

போரட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து பங்கேற்று வருபவரும், இன்குலாபி மோர்ச்சாவை சேர்ந்தவருமான நாராயணன் தத், ” “விவசாய சட்டங்களுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் பகத்சிங் உள்ளார்ந்தவர். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களைக் காப்பாற்ற பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக 1907ல் பக்ரி சம்பல் ஜாட்டா லேஹார் பகத்சிங்கின் மாமாவால் தொடங்கப்பட்டது. அதே ஆண்டில் பகத்சிங் பிறந்தார். பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் ஆகியோர் விவசாயிகளின் சுரண்டலை வெளிச்சம் போட்டுக் காட்டினர். எனவே, அவர்கள் அனைவரும் உயிர்த்தியாகம் செய்து 90 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இந்த நாட்டின் இளைஞர்களுக்குத் தியாகத் தலைவர்களாக விளங்குகிறார்கள் என்பதை  நாங்கள் உணர்கிறோம்” என அவர் தெரித்ததாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

“இளைஞர்கள் டெல்லி நோக்கி அணிவகுப்பதற்கு முன்னர் கட்கர் காலன், சுனாம் மற்றும் பல இடங்களில் மோட்டார் சைக்கிள் பேரணிகள் மேற்கொள்ளப்பட்டன. இளைஞர்களுக்கு உத்வேகம் தருவதற்கு ஆதாரமாக தியாகிகள் தினம் (மார்ச் 23) உள்ளது. எனவே அனைத்து போராட்ட தர்ணாக்களின் ஒரு பகுதியாக இருக்கும் இளைஞர்கள், தியாகங்கள் நிறைந்த புகழ்பெற்ற கடந்த காலத்துடன் இணைந்திருக்க வேண்டும். இன்று நமக்குப் பகத் சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் முன்னெப்போதையும் விட அதிகமாக தேவைப்படுகிறார்கள்” என பாரதிய கிசான் சங்கத்தின் (டகவுண்டா) பொதுச் செயலாளர் ஜக்மோகன் சிங் பாட்டியாலா கூறியிருப்பதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்