Aran Sei

கொரோனாவால் உதவி நிர்வாக பொறியாளர் உயிரிழப்பு – நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சருக்கு உதவி பொறியாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை

கொரோனா தொற்று பாதித்து உதவி நிர்வாக பொறியாளர் மோகன்குமார் உயிரிழந்தது தொடர்பாக இணை மேலாண்மை இயக்குநர்மீது நடவடிக்கை எடுக்க கோரி ஊரக தொழில்துறை அமைச்சருக்குத் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக அமைச்சருக்கு அவர்கள் எழுதியிருக்கும் கடிதத்தில், “தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வரும் எஸ். கோபால சுந்தரராஜ், இ.ஆ.ப தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுவதில்லை. இதனால் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உயிருக்குப் பாதிப்பு ஏற்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆளும் மாநிலங்களில் தேயும் பாஜக; தேர்தல்கள் சொல்லும் உண்மை – சரத் பிரதான்

“தமிழக அரசு சார்பில் கடந்த மாதம் 26 ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கொரோனா நெறிமுறைகளை வழங்கியுள்ளது. ஆனால் இணை மேலாண்மை இயக்குநர் இந்த நெறிமுறைகளைப் பொருட்படுத்தவில்லை. 29.04.2021 ஆம் தேதி காணொளி வாயிலாக நடத்திய கூட்டத்தில், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்ப்பட்டு வரும் அனைத்து வீடுகளையும் ஆய்வு செய்து புகைப்படம் எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார் என்றும்  கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில், அனைத்து பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் அனைவரையும் பயனாளிகளுடன் நின்று புகைப்படம் எடுக்க சொல்லி வற்புறுத்துகிறார்.என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கில் பட்டினி மரணங்களைத் தடுக்கும் கேரள அரசு: உணவு பொருட்களை வீடுகளுக்குள் சேர்க்க முதல்வர் பினராயி விஜயன் உத்தரவு

இந்த கட்டளைக்கு பயந்து புகைப்படம் எடுக்க சென்ற 15க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் களப் பொறியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பல கொரோனா அறிகுறிகளுடன் பரிசோதனை செய்து வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உதவி நிலை பொறியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

‘கொரோனாவிலிருந்து குணமடைய மாட்டு மூத்திரத்தைக் குடிக்க வேண்டும்’: குடித்துக் காட்டிய பாஜக எம்எல்ஏ

ஆய்வு பணிகள் மட்டுமல்லாது கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிகள் இருப்பதாக கூறினால் அதை பற்றி தன்னிடம் கூற வேண்டாம் என ஒருமையில் பேசுவோடு, களப் பொறியாளர்களைக் கீழ்தரமான வார்த்தைகளால் வசைபாடுகிறார் என்றும் பெண் பணியாளர்களையும் ஒருமையில் பேசி, அவர்களை கண்ணீர் வடிக்க வைக்கிறார் என்றும் கடிதத்தில் கூறியுள்ளனர்.  இதனால் அனைவரும் பதற்றத்துடன் பணிபுரியும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும். மனித உயிர்கள்மீது அக்கறை இல்லாமல் செயல்படுவது, அரசாங்கத்திற்கும், வாரியத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் கூறிய குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர்கள் நலச் சங்கம், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பல உயிர்களை இழக்க நேரிடும். ஆகையால் பொறியாளர்கள் நலன் கருதி தக்க நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக் கொள்வதாக” என குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர்கள் நலச் சங்கத்தினர் எழுதியக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்