Aran Sei

தமிழகம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் இன்று – 20 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள்

Image Credits: DNA India

மிழ்நாடு, கேரளா, புதுச்சேரி சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப் பதிவு ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்திலும் பல கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் ஒரு கட்டம் இன்று  நடைபெறுகிறது.

மேற்கு வங்க மாநிலத்திற்கு 8 கட்டங்களாகவும், அசாம் சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாகவும், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய சட்டப்பேரவைகு ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி கேரளாவில் 140 தொகுதிகள், தமிழ்நாட்டில் 234 தொகுதிகள், புதுச்சேரியில்  30 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.

கர்நாடகாவின் கிசான் பஞ்சாயத்துகளில் – பழக்கமான, மனதை நொறுக்கும் கதை

அசாம் மாநிலத்தில் மூன்றாவது மற்றும் இறுதி கட்டமாக 40 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் மூன்றாவது  கட்டமாக 31 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

காலை 7 தொடங்கி நடைபெற்று வரும்  இந்த வாக்குப் பதிவில் 20 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற உள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்