Aran Sei

முதல்வராக பதவியேற்கும் தளபதி, சேட்டன், தீதீ: தோல்வியடைந்ததா பாஜகவின் தேர்தல் வியூகம்

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்றும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், திராவிட முன்னேற்றக் கழகம் (கூட்டணி), அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (கூட்டணி), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (கூட்டணி), நாம் தமிழர் (தனித்து போட்டி), மக்கள் நீதி மய்யம் (கூட்டணி) ஆகிய கட்சிகளுக்கிடையேயான ஐந்து முனை போட்டி நடைபெற்றது. ஐந்து முனை போட்டி நடைபெற்றாலும், கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை மாறி மாறி ஆண்டு வரும் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையே தான் பிரதான போட்டி என்று அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்பட்டது. திமுகவின் முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலினும், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் (தற்போதைய நிலவரப்படி) திமுக கூட்டணி 157  தொகுதிகளையும், அதிமுக கூட்டணி 77 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. அமமுக, மநீம மற்றும் நாம் தமிழரால் ஒரு இடங்களில் கூட வெற்றிப்பெற முடியவில்லை. இதன் மூலம் அறுதி பெரும்பான்மையுடன் திமுக கூட்டணி வெற்றிப் பெற்று ஆட்சியமைக்க உள்ளது.

‘அதிமுக ஆட்சிக்கு அல்ல எதிர்கட்சியாகக் கூட வரமுடியாது’ – ஸ்டாலின்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளுக்கு, என்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, திமுக – காங்கிரஸ் கூட்டணி, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் ஆறு முனைப் போட்டி நடைபெற்றது. இதில் (தற்போதைய நிலவரப்படி) என்.ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி, வெற்றிப் பெற்று ஆட்சியமைக்க உள்ளது.

‘அதிகார மோகமுள்ள கிரண்பேடியின் காலதாமதமான நீக்கம் பாஜகவின் கபட நாடகம்’ – ஸ்டாலின் விமர்சனம்

கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளுக்கிடையேயான மும்முனைப் போட்டி நிலவியது. இந்தத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி சார்பில் கேரளாவின் தற்போதைய முதல்வரான பினராயி விஜயனும், பாஜக சார்பில் மெட்ரோமேன் இ.ஸ்ரீதரனும் களமிறக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

‘கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்ற பொய்யை குழித்தோண்டிப் புதைப்போம்’ – ஸ்டாலின்

இந்தச் சூழலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணி தற்போதைய நிலவரப்படி 95 தொகுதிகளையும், ஐக்கிய ஜனநாயக முன்னணி 41 தொகுதிகளையும், தேசிய ஜனநாயக முன்னணி 1 தொகுதிகளையும், பிற கட்சிகள் 3 மூன்று இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலம் இடது ஜனநாயக முன்னணியின் முதல்வர் வேட்பாளர் பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

பெரியாரின் பெயரை நீக்கிய நெடுஞ்சாலைத்துறை: மதவெறி கூட்டத்தின் கால்பணிகிறதா அதிமுக – ஸ்டாலின் கேள்வி

அசாமில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையேயான இருமுனைப் போட்டி நிலவி வந்தது. இந்த மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளில், பாஜக 78 தொகுதிகளையும், காங்கிரஸ் 46 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் 2 இடங்களையும் கைபற்றியுள்ளது. இதன் மூலம் ஆளும் பாஜக அரசு மீண்டும் அசாம் மாநிலத்தைக் கைப்பற்றியுள்ளது.

உத்தர பிரதேசத்திற்கு அடுத்தப்படியாக அதிகளவிலான சட்டமன்ற தொகுதிகளை (292) கொண்டுள்ள மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவியது. இங்குத் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணிகளுக்கு இடையேயான மும்முனை போட்டி நிலவியது.

இந்தத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் (தற்போதைய நிலவரப்படி) 213 தொகுதிகளையும், பாஜக கூட்டணி 78 தொகுதிகளையும், இடது முன்னணி 1 இடத்தையும் கைபற்றியுள்ளது.

சமூகம், சட்டம், கல்வி, பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம் என அனைத்துக்குமான ஒரே அடையாளம் அம்பேத்கர் – மு.க.ஸ்டாலின் புகழாரம்

இதன் மூலம், திரிணாமூல் காங்கிரசின் தலைவர் மம்தா  பானர்ஜி மீண்டும்  முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ – திமுகவின் தேர்தல் வியூகம்

பெரும்பாலான தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி (Opinion Poll & Exit Poll) புதுச்சேரி மற்றும் அசாமில் பாஜக வெற்றி பெறும் எனவும் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் எனவும் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திரிணாமூல் கட்சி வெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

DISCLAIMER : வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்