Aran Sei

பத்திரிகையாளரை மருத்துவமனையில் சங்கிலியால் கட்டிவைத்த காவல்துறையினர் – விசாரணை நடத்த காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

Credit: The Indian Express

டிசாவில் பாலசோர் மாவட்டத்தில் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் லோக்நாத் தலேவை மருத்துவமனையில் சங்கிலியால் கட்டிவைத்தது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதன்சு சேகர் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார்.

ஒடியா நாளிதழான சம்பத் மற்றும் தொலைக்காட்சியான கனக் நியூஸின் செய்தியாளராக லோக்நாத் தலே, போதை பொருள் கடத்தல் தடுப்பில் காவல்துறையின் தோல்வி தொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தார். இதனால் காவல் ஆய்வாளர் கோபம் அடைந்ததாக தலே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சரிவை சந்திக்கும் காங்கிரஸ் கட்சியின் ஆண்டு வருமானம் – தேர்தல் ஆணையம் தகவல்

முன்னதாக இரு சக்கர வாகனத்தால் மோதிய, ஊர்காவல்படையினரிடம் நஷ்ட ஈடு கேட்டதற்காக வழக்கு பதிந்துள்ளனர். பின்னர் அவரின் செல்போனையும் காவல்துறையினர் பறித்துக்கொண்டதாக பத்திரிகையாளர் தலே குற்றம் சாட்டியுள்ளார்.

தலே மீது இந்திய தண்டனைச் சட்டம் 341 (தவறான கட்டுப்பாடு), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 294 (ஆபாசமான பாடல் அல்லது வார்த்தைகளை உச்சரித்தல்), 506 (குற்ற மிரட்டல்), 353 (பொது ஊழியரை பணி செய்யவிடாமல் தாக்குதல்), 186 (பொது பணியைச் செய்வதில் இருந்து பொது ஊழியரை தடுக்க தாக்குதல்), 189 (அரசு ஊழியருக்குக் காயம் ஏற்படுத்துதல் அல்லது அச்சுறுத்துதல்), 332 (கடமையை நிறைவேற்றும் பொது ஊழியரை தாக்குதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மத்தியபிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர் – ஆடைகளை களைந்து அவமானப்படுத்திய காவல்துறையினர்

சம்பவம் குறித்து தெரிவித்துள்ள தலே, “கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் நான் மயக்கமைடந்து விட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். காலை கண் விழித்து பார்த்த போது இடது கால் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதை கண்டேன். கடும் ஆட்சேபணைக்கு பின்னர் காலை 11.30 மணியளவில் சங்கிலி அகற்றப்பட்டது. இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளேன்” எனக் கூறியுள்ளார்.

எல்லா மாநிலங்களும் தங்களுக்குள் தொடர்பு கொள்ள ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்துங்கள் – அமித் ஷா

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாலசோர் சட்டமன்ற உறுப்பினர் சுகந்த் நாயக், “அந்த காவல் ஆய்வாளரின் ஆணவ செயல் பற்றி நான் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன், அவர் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

காவல்துறையினரின் செயலுக்கு கடும் கண்டங்களை தெரிவித்துள்ள ஒடிசாவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

Source: The Indian Express

டாணாக்காரன் விமர்சனம்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்