Aran Sei

முன்களப்பணியாளர்கள் தாக்கப்படுவதில் இந்தியா முதலிடம் – மருத்துவப்பணியாளர் கூட்டமைப்பு தகவல்

உலகளவில் கொரோனா தொற்றின் பயத்தின் காரணமாக சுமார் 1200 மருத்துவப் பணியாளர்களில், மூன்றில் ஒரு பங்கினர் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவப்பணியாளர்களின் பாதுகாப்பிற்கான கூட்டமைப்பு (SHCC) அறிக்கை வெளியிட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் தான் அதிபட்சமாக 412 மருத்துவ பணியாளர்களில் 112 பேர் தாக்கப்பட்டிருப்பதாகவும், இது கொரனோ தொற்று பாதிக்கப்பட்டவர்களாலும், அவர்களது உறவினர்களாலும், காவல்துறையாலும் நடைபெற்றிருக்கிறது என அந்த கூட்டமைப்பின் அறிக்கை கூறுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணி தனியாருக்கு வழங்கப்படும் – நிதி ஆயோக் அறிவிப்பு

இதுகுறித்து பேசியுள்ள அந்த கூட்டமைப்பின் நிறுவனர் ராபர்ட் ருபென்ஸ்டைன், ” நாம் கொரோனா தொற்றின் இரண்டாம் ஆண்டில் இருக்கிறோம். சென்ற ஆண்டில் நாம் செய்த தவறுகள் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும். அதுமட்டுமல்லாது முன் களப்பணியாளர்களின் பாதுகாப்பு குறித்தும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளதாக தி வயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளவில் மெக்ஸிகோ, முன்களப்பணியாளர்கள் தாக்கப்பட்டதில் இரண்டாம் இடம் வகிப்பதாகவும், ஓடும் பேருந்தில் இருந்து சகபயணிகளால் செவிலியர்கள் இறக்கி விடப்பட்டதும், நோயாளிகளோடு தொற்று உடையவர்களை கண்டறியும் போது மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்பட்டிருக்கும் சம்பவங்களும் நடைப்பெற்றிருக்கிறது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவிற்கு எதிராக பதாஞ்சலியின் கொரோனில் மருந்து – அங்கீகாரம் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

இது போன்ற தாக்குதல் சம்பங்களுக்கு போலியான செய்திகளும், சில தனி மனிதர்கள் மருத்துவ நடைமுறைகள்  குறித்து வெளிப்படுத்தும் அவநம்பிக்கையும் தான் மிக முக்கிய காரணமாகும் என்றும் , கடந்த ஆண்டு இந்த  சம்பவங்கள்   குறித்து அறிக்கை வெளியிடப்பட்டப் பின் ஐக்கிய நாடுகள் சபை (UNO) மெக்ஸிகோவிலிருந்து மருத்துவப் பணியாளர்களை சிறப்பித்தாகவும் அப்போது இந்த துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் பேசப்பட்டது என்றும் தி வயர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக பணக்காரர்களில் 8வது இடத்தில் அம்பானி – கொரோனா காலத்தில் மட்டும் 24% வளர்ச்சி

“மருத்துவ துறையில் நிலவும் பாகுபாடுகளே இந்த அவநம்பிக்கைக்கு வழிவகுக்கிறது. அதுதான் வன்முறை சம்பவங்களுக்கு தோற்றுவாயாக உள்ளது. மேலும், பறிபோகும் பெண்களின் உரிமைகள் குறித்தும், சமத்துவமற்ற சுகதாரத் துறையின் அணுகுமுறைகள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும். கட்டமைப்பு ரீதியாக அதை களைய வேண்டும்” என்றும் ருபென்ஸ்டைன் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்களப்பணியாளர்கள் மீதான வன்முறையை யாராலும் ஏற்று கொள்ள இயலாது என்றும் அது அனைவரையும் பாதிக்கும் என்றும் உலக செவிலியர் அமைப்பின் உயர்மட்ட ஆலோசகர் எரிக்கா பர்ட்டன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டில் தற்போது வரை உலக அளவில், முன் களப்பணியாளர்களுக்கு எதிராக 1,172 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது என்று தி வயர் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்